ரஜினிக்கு விழுந்த திட்டு
சென்னை:
சென்னையில் நடந்த தமிழ்த் திரையுலகக் கூட்டத்தில் பேசிய அனைவரும் காவிரி விவகாரத்தில் வாய் திறக்காமல் இருந்து வரும்ரஜினியை ஒரு பிடி பிடித்தனர்.
அதில் மிகக் காரமாக இருந்தவை இயக்குனர் பாரதிராஜா மற்றும் தங்கர்பச்சானின் பேச்சுகள் தான். அதன் விவரம்:
தங்கர் பச்சான்: தஞ்சையில் தண்ணீரின்றி வாடும் விவசாயிகள் எலிக்கறியைத் தின்று வாழ்கிறார்கள்.
ஆனால் ஒரு படத்திற்கு கவுண்டரிலேயே ரூ. 200 டிக்கெட் வைத்து ஒரு கூட்டம் இங்கு பிழைத்துக் கொண்டிருக்கிறது.யாரையெல்லாமோ தூக்கி வைத்து சூப்பர் ஸ்டாராக்கி, உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது அப்பாவி தமிழர் கூட்டம்.
அவர்களை நாம் மாற்றியாக வேண்டும். மாண்டியா அணையிலிருந்து கீழே தள்ளி விட்டு தற்கொலையாக்கி, அவரைதியாகியாக்கிக் கொண்டிருக்கிறார்கள் கர்நாடகத்தினர். ஆனால் குதித்துத் தற்கொலை செய்யக் கூட நமது அணையில் தண்ணீர்இல்லை.
தமிழ் உணர்வு வர வேண்டும். இல்லாவிட்டால் எந்தப் போராட்டத்திற்கும் நாம் லாயக்கற்றவர்களாகி விடுவோம்.
பாரதி ராஜா: ராஜ்குமார் தலைமையில் நடந்த போராட்டத்தில் நடிகர்கள் ரவிச்சந்திரனும், ரமேஷ் அரவிந்த்தும் கலந்துகொண்டது தவறு என்றார்கள். நான் அதை ஏற்றுக் கொள்ள மாட்டேன். ரவிச்சந்திரன் வேலூர்காரர்தான், தமிழர்தான்.
ஆனால் அவர் பிழைப்பது கர்நாடகத்தில், அங்குதான் அவர் குப்பைகொட்டிக் கொண்டிருக்கிறார். எனவே அந்த மக்களுக்காகஅவர் போராட்டத்தில் கலந்து கொண்டது சரிதான். கலந்து கொள்ளாமல் இருந்திருந்தால் தான் அவர் நம்பிக்கைத் துரோகியாகிஇருப்பார்.
அதேபோல ரமேஷ் அரவிந்த் குப்பை கொட்டிக் கொண்டிருப்பதும் அங்குதான். எனவே அவரும் தனது உணர்வைவெளிப்படுத்தியிருக்கிறார்.
ஆனால் ..? (இந்த இடத்தில் பாரதிராஜாவின் கண்களில் கடும் கோபம் கொப்பளித்தது) தமிழ் மண்ணில் பிழைக்க வந்து விட்டு,தமிழர்களின் வியர்வையில் குளிர் காய்ந்து கொண்டு, தமிழர்களின் பணத்தில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் சில சகோதரர்கள்,அந்தத் தமிழர்களின் ஜீவாதாரப் பிரச்சினையில் எந்தக் கருத்தும் கூறாமல் இதுவரை அமைதி காத்துக் கொண்டிருப்பதுதான்மன்னிக்க முடியாததாக உள்ளது.
அவர்களை எந்தக் கணக்கில் சேர்ப்பது என்றே தெரியவில்லை. அதனால்தான் இந்தக் கூட்டம், போராட்டம் எல்லாம்.
தமிழர்களால் நாம் இன்று வசதிகள் பெற்று வாழ்கிறோம். அந்தத் தமிழர்களுக்காக ஒரு சொட்டு வியர்வையைச் சிந்தினால் என்னதப்பு? அவர்களுடைய உப்பைத் தின்றிருக்கிறோம், அவர்களுடைய உழைப்பை சுரண்டியிருக்கிறோம்.
அதற்கு நன்றிக்கடன் செலுத்தாவிட்டால் நாம் மனிதர்களே இல்லை. தாகம் எடுத்தால் எதிரிக்கு கூட தண்ணீர் கொடுக்கும குணம்படைத்தது தமிழ் இனம்.
ஆனால் செத்தால் சாகட்டும் என்று தமிழக விவசாயிகளுக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகத்திற்கு எதிராக இந்த பிற மொழிக்கலைஞர்கள் குரல் கொடுக்காததைப் பார்த்து மக்கள் கேலி செய்கிறார்கள், கேவலப்படுத்துகிறார்கள்.
வெளியில் போனால் என்ன சார் நீங்க, ஒன்னுமே செய்யாமல் இருக்கீங்க என்று மக்கள் என்னிடம் கேள்வி கேட்டு மானத்தைவாங்குகிறார்கள். எனவே தமிழ் உணர்வுடன் இந்தப் போராட்டத்தை நடத்தவுள்ளோம். இது தமிழக அரசுக்கு கலையுலகம்தெரிவிக்கும் தார்மீக ஆதரவாக இருக்கும் என்றார் பாரதிராஜா.
- கூட்டத்தில் பேசிய பலரும் ரஜினியையும் மற்ற கன்னடக் கலைஞர்களையும் தாக்கிப் பேசினர். தங்கர் பச்சான் ரஜினியைநேரடியாக தாக்கிப் பேசியபோது பலத்த கைத்தட்டல் எழுந்தது.
- தமிழ்த் திரைப்பட பாதுகாப்புக் கழகத் தலைவர் கே.ராஜன் மிகவும் ஆவேசமாக பேசினார். ஆனால் அடிதடி என்று போகவேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
- கூட்டத்தில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், வினியோகஸ்தர்கள், திரைப்பட உரிமையாளர்கள் என அனைத்து அமைப்புகளின்நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டனர்.
- 150 பேர் வரை மட்டுமே கூட்டத்திற்கு வந்திருந்தாலும், இவர்கள் அனைவரும் தமிழ் திரையுலகின் மிக முக்கிய பிரமுகர்கள்என்பதால் இவர்கள் எடுத்துள்ள முடிவுகளால் தமிழ்த் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்படப் போவது உறுதி.
- ரஜினியை இந்தப் போராட்டத்திற்குத் தலைமை ஏற்க வைக்க வேண்டும். இல்லாவிட்டால் அவரைப் புறக்கணிக்க வேண்டும்என்றும் சிலர் கருத்துக் கூறினர்.
பாரதிராஜா, தமிழ் திரைப்படக் கூட்டமைப்பின் தலைவர் செல்வின் ராஜ், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர்இப்ராகிம் ராவுத்தர், சென்னை-செங்கை திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் சிந்தாமணி முருகேசன், தியேட்டர்உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன்
தமிழ்த் திரைப்பட பாதுகாப்புக் கழகத் தலைவர் கே.ராஜன், நடிகர்கள் சரத் குமார், மயில்சாமி, இயக்குனர்கள் மணிவண்ணன்,மனோ பாலா, ஆர்.சுந்தரராஜன், சரண், சீமான், தங்கர்பச்சான், மனோஜ் குமார், தயாரிப்பாளர்கள் அன்பாலயா பிரபாகரன்,அழகப்பன், கோவை மாவட்ட வினியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் தம்பித்துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதுதவிர தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கமான ஃபெப்சியின் சார்பில் சிவா கலந்து கொண்டார்.
உடைகிறது நடிகர் சங்கம்:
நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டும் அவர் கலந்து கொள்ளவில்லை.
நடிகர்களும் நடிகைகளும் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. விஜயகாந்த் கட்டளையின் பேரில் அவர்கள் கலந்துகொள்ளவில்லை என்று தெரியவந்துள்ளது. இருப்பினும் கூட்டத்தில் பேசியபோதும், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டபோதும்அதை நடிகர் சங்கத்தின் துணைத் தலைவரான சரத்குமார் முழுமையாக ஆதரித்தார்.
எனவே காவிரிப் பிரச்சினையில் நடிகர் சங்கமும் பிளவுபடும் என்று தெரிகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications