வறுமையின் கொடுமை: குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை
சென்னை:
சென்னையில் வறுமையின் கொடுமை தாங்க முடியாமல் தன் 2 வயது மகனுடன் ரயில் முன் பாய்ந்து ஒரு பெண்தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை வியாசர் பாடியைச் சேர்ந்த பழனி என்பவர் ஒரு கூலித் தொழிலாளி. இவரது மனைவி கஸ்தூரி.இவர்களுக்கு நந்தினி என்ற 5 வயது பெண் குழந்தையும், விக்கி என்ற மகனும் உள்ளனர்.
பழனிக்கு அடிக்கடி வேலையில்லாமல் போனதால் குடும்பம் வறுமையில் வாடியது. இது போதாதென்று அடிக்கடிபழனிக்கும், கஸ்தூரிக்கும் சண்டை வேறு வந்துள்ளது.
இதனால் வெறுத்துப் போன கஸ்தூரி, தனது 2 குழந்தைகளுடனும் வியாசர்பாடி ரயில் தண்டவாளத்தில் வந்த ரயில்முன் பாய்ந்தார். இதில் கஸ்தூரியும், விக்கியும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
நிந்தினி மட்டும் படுகாயத்துடன் உயிர் தப்பினாள். அவள் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளாள்.
வடிவேலு ஸ்டைலில் அலம்பிய ரவுடி:
இதற்கிடையே குடி போதையில் டீக்கடையை சூறையாடிய ரவுடியை போலீஸார் தேடி வருகிறார்கள்.
வடிவேலு ஒருபடத்தில் சாராயக்கடைக்குப் போய் குடித்து விட்டு படு அலம்பல் அலம்பி கடையையேசூறையாடுவார். அதே ஸ்டைலில் ஒரு ரவுடி சென்னை டீக் கடையை துவம்சம் செய்துள்ளார்.
அமிஞ்சிக்கரையைச் சேர்ந்த ராமு அந்தப் பகுதியில் பெரிய ரவுடி. நன்றாகக் குடித்து விட்டு எழும்பூரில் உள்ளதனது சகோதரி வீட்டுக்கு சென்றார் ராமு.
அப்போது சாமி ரெட்டித் தெரு பகுதியில் ஒரு டீக்கடைக்குப் போனார். அங்கு டீ கேட்டார். அவர்கள்கொடுக்கவில்லை. எனக்கா டீ கொடுக்கவில்லை என்று கூறி கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தஒவ்வொருவரையும் அடித்து விரட்டினார்.
பின்னர் டீக்கடையில் இருந்த பாய்லர், சேர், டேபிள், கண்ணாடி பாட்டில்களை தூக்கி வீசி கடையையே துவம்சம்செய்தார். சில நிமிடங்களில் கடையே சிதறிப்போனது. இதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் ராமுஅங்கிருந்து போய் விட்டார்.
இதையடுத்து தலைமறைவாகியுள்ள ராமுவை போலீஸார் தேடி வருகிறார்கள்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications