ஜெயா டி.வி. ஊழியர்கள் போல் நடித்து ஏமாற்றிய கும்பல் கைது
திண்டுக்கல்:
ஜெயா டி.வி. ஊழியர்கள் போல் நடித்து அதே நிறுவனத்தின் உள்ளூர் நிருபரிடம் அழகான பெண் ஒன்றுவேண்டும் என்று கேட்ட 8 பேர் கொண்ட ஒரு கும்பலைப் போலீசார் கைது செய்தனர்.
சென்னையிலிருந்து மதுரைக்கு இன்று காலை எட்டு பேர் வந்து சேர்ந்தனர். அங்கிருந்து ஒரு வேனை வாடகைக்குஎடுத்துக் கொண்டு திண்டுக்கல் கிளம்பினர்.
அவர்கள் வீடியோ காமிரா உள்ளிட்ட ஷூட்டிங் நடத்துவதற்கான அனைத்துக் கருவிகளையும் வைத்திருந்தனர்.
திண்டுக்கல் வந்து சேர்ந்த அந்தக் கும்பல், அங்குள்ள உள்ளூர் ஜெயா டி.வி. நிருபரைச் சந்தித்தனர். விரைவில்ஒளிபரப்பாகவுள்ள ஒரு நிகழ்ச்சியின் படப்பிடிப்புக்காக ஒரு அழகான பெண்ணை ஏற்பாடு செய்யுமாறு அந்தநிருபரிடம் அவர்கள் கூறினர்.
அந்தக் கும்பலின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த திண்டுக்கல் நிருபர், உடனடியாக அவர்களுக்குத் தெரியாமல்சென்னைக்கு போன் செய்து ஜெயா டி.வி. தலைமையகத்திடம் இதுகுறித்து விசாரித்தார்.
திண்டுக்கல்லுக்கு எந்தக் குழுவையும் நாங்கள் அனுப்பவில்லையே என்று சென்னையிலுள்ள ஜெயா டி.வி.அலுவலகம் தெரிவித்தது.
சரி, நாம் சந்தேகப்பட்டது சரியாகத் தான் போய்விட்டது என்று நினைத்துக் கொண்டே அந்த நிருபர் உடனடியாகப்போலீசாருக்குத் தகவல் கொடுத்தார். பின்னர் ஒன்றுமே தெரியாதவர் போல் வந்திருந்த மோசடிக் கும்பலிடம்பேசிக் கொண்டிருந்தார்.
சிறிது நேரத்திலேயே வந்த போலீசார் அந்த போலி டி.வி. கும்பலைச் சேர்ந்த எட்டு பேரையும் சுற்றி வளைத்துக்கைது செய்தனர்.
டி.வி. காமிரா உள்ளிட்ட அனைத்துப் பொருள்களையும் அவர்கள் வாடகைக்குத் தான் எடுத்துக் கொண்டுவந்ததாக விசாரணையின் போது தெரிய வந்தது. அவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட எட்டு பேரையும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications