பிற கன்னட நடிகர்களின் மகா மெளனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இயக்குநர் பாரதிராஜா தலைமையில் வருகிற 12ம் தேதி நெய்வேலியில் நடக்கவுள்ள மாபெரும் திரையுலகபோராட்டத்திற்கு திரையுலகிலும், அதற்கு வெளியிலும் ஆதரவு பெருகி வருகிறது.

கமல் பங்கேற்பு:

நெய்வேலியில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ள கமலும் சம்மதம் தெரிவித்து விட்டார் என்று தெரியவருகிறது.

ரஜினி வர மாட்டார்:

போராட்டம் நடத்துவதே தவறு என்று ஞான உபதேசம் செய்துவிட்ட ரஜினி இந்தப் போராட்டத்தில் பங்கேற்க மாட்டார் என்பதுநிச்சயமாகிவிட்டது.

ஆனால், கன்னடத்தைத் தாய் மொழியாகக் கொண்ட கர்நாடகத்தைச் சேர்ந்த பிற நடிகர்களான அர்ஜூன்,(ஒரிஜினல் கன்னட பெயர் அர்ஜூன் சர்ஜா), முரளி, பிரபுதேவா, அவரது அண்ணன் ராஜூ சுந்தரம், பிரகாஷ் ராஜ்(ஒரிஜினல் பெயர் பிரகாஷ் ரய்) உள்ளிட்டோர் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. மகாமெளனத்தில் ஆழந்து போய் இருக்கிறார்கள்.

தங்கள் குரு ரஜினியைப் பின்பற்றுவார்களா அல்லது உப்பிட்ட தமிழ் மண்ணுக்கு இவர்களாவது நன்றியுடன்இருப்பார்களா என்று தெரியவில்லை.

பிரகாஷ் ராஜின் குழப்பம்:

இதில் பிரகாஷ் ராஜ் கன்னடத்தைச் சேர்ந்தவர் என்றாலும் கூட தமிழ் சினிமாவை அதிகம் நேசிப்பவர். தமிழ்நடிகர்களையே அனுமதிக்காக கன்னட திரையுலகத்தையே ஒருமுறை மெச்சூரிட்டி இல்லாதவர்கள் என்றுசாடியவர் இவர்.

ஆனால், இப்போது தமிழில் வாய்ப்புக்கள் குறைவாக உள்ளதால் தொடர்ந்து கன்னடத்தில் நடித்து வருகிறார். இதில் கலந்துகொண்டால் கர்நாடகத்தில் எதிர்ப்பை சந்திக்க வேண்டி வரும். இதனால் இவர் என்ன செய்வது என்று தெரியாமல்குழம்பிப் போய் உள்ளார்.

அர்ஜூனின் மெளனம்:

அர்ஜூனைப் பொறுத்தவரை அவ்வப்போது தனது தாய்மொழியில் நடித்துக் கொண்டு தான் இருக்கிறார். ஆனால்,அது குறித்து தமிழ் பத்திரிக்கைகளில் இவர் பேசுவது கூட இல்லை. இவரது தம்பியும் கன்னடத்தில் சில படங்களைஇயக்கியுள்ளார்.

இவருக்கு தமிழை விட கன்னடம் பக்கம் தான் பற்று ஜாஸ்தி. தீவிரமான ராஜ்குமார் ரசிகர் வேறு. ஆனால்,இப்போது குப்பை கொட்டுவது தமிழ்நாட்டில் தான். இவரும் மகா குழப்பத்தில் உள்ளார்.

முரளியின் பிரச்சனை:

நடிகர் முரளியின் தந்தை கன்னடத்தில் பிரபல தயாரிப்பாளர் ஆவார். எனவே அப்பாவுக்கு பிரச்சினை வருமேஎன்று அவர் தயங்குவதாகக் கூறப்படுகிறது.

வாய்பேச 1,2,3:

பிரபுதோவாவும், ராஜு சுந்தரமும் தங்கள் தம்பியை இப்போது தான் கன்னடத்தில் ஹீரோவாக்கியுள்ளார்கள். ராஜுசுந்தரம் கன்னடத்தில் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கிறார். பிரபுதேவா கன்னடத்தில் நடித்த எச்2ஓ படத்தில் தமிழ்வசனம் இருந்ததால் அந்தப் படத்தை திரையிட விடாமல் கன்னட வெறியர்கள் தடுத்தார்கள்.

அதைக் கண்டித்து பிரபுதேவா ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. தமிழ் மீது அவ்வளவு நன்றி உடைய மனிதர்இவர். இவரது தந்தை சுந்தரத்தில் ஆரம்பித்து 3 சகோதரர்களும் தமிழ் மூலம் கோடிக்கணக்கில் பணம் ஈட்டிவருகின்றனர்.

பாரதிராஜா எசசரிக்கை:

இதற்கிடையே, கலையுலகினர் அனைவரும் இந்தப்போராட்டத்தில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும்.இல்லாவிட்டால் கடுமையான விளைவுகளை அவர்கள் சந்திக்க நேரிடும் என்று பாரதிராஜா கடுமையாகஎச்சரித்துள்ளார்.

தமிழா? கன்னடமா? இரண்டில் ஒன்று பார்த்து விடுவது என்றும் பாரதிராஜா தலைமையிலான குழுவினர்தீர்மானமாக உள்ளனர்.

இளங்கோவன் ஆதரவு:

இந்தப் போராட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் கட்சி ஆதரவு தரும் என அதன் செயல் தலைவர் இளங்கோவன்அறிவித்துள்ளார். கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்தாலும் தமிழர்களுக்கான போராட்டத்தில் பதுங்கி,ஒதுங்காமல் போராட்டத்தை ஆதரிக்க இளங்கோவன் முன் வந்துள்ளது பாராட்டுக்குரியது தான்.

அதே போல தவறு செய்யும் கர்நாடக காங்கிரஸ் அரசைக் கண்டித்தும் இவர் பேசுவாரா?

இந் நிலையில் திரையுலகினரின் இப் போராட்டத்துக்கு சமூக நீதிக் கட்சியின் தலைவர் ஜெயகவீரபாண்டியனும்ஆதரவு தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+