"தமிழ் நடிகர்களை விரட்டியடிப்போம்": ராஜ்குமார் ரசிகர்கள் மிரட்டல்
பெங்களூர்:
கன்னடர்களின் சுயமரியாதையை உரசிப் பார்க்கும் தமிழ் சினிமா நடிகர், நடிகைகள் பெங்களூர் வந்தால்விரட்டியடிப்போம் என்றும் நெய்வேலியிலிருந்து கர்நாடகத்திற்கு வரும் மின்சாரத்தை ரத்து செய்தால்கர்நாடகத்தில் தமிழ்ப் படங்களைத் திரையிட விட மாட்டோம் என்று கன்னட நடிகர் ராஜ்குமாரின் ரசிகர்கள்மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக ராஜ்குமார் அபிமானிகள் சங்கம் வெளிட்டுள்ள அறிக்கை:
காவிரியில் கர்நாடகம் நீர் திறந்துவிடாவிட்டால் நெய்வேலியிலிருந்து அம்மாநிலத்துக்கு செல்லும் மின்சாரத்தைதுண்டிக்கச் சொல்லி போராட்டம் நடத்துவோம் என்று தமிழ் திரையுலகம் அறிக்கை விட்டிருப்பதைக் கடுமையாகஆட்சேபிக்கிறோம்.
ஐந்து கோடி கன்னடர்களின் கருத்துக்களுக்கு எதிராகவும் கன்னட சினிமா உலகை மதிக்காமலும் தமிழகத்தில்போராட்டம் நடத்தினால் பெங்களூரில் தமிழ் சினிமாக்களை திரையிட விடாமல் தடுப்போம்.
கன்னடர்களின் சுயமரியாதையை உரசிப் பார்க்கும் தமிழ் சினிமா நடிகர், நடிகைகள் பெங்களூர் வந்தால்விரட்டியடிப்போம்.
ஆகவே தமிழ் நடிகர்கள் சங்கம் தன் போராட்டத்தை திருப்பிப் பெற்று மன்னிப்பும் கேட்க வேண்டும் என்று அந்தஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே பாரதிராஜாவின் அறிக்கைக்கு கர்நாடக திரையுலகினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.தமிழ்த் திரையுலகினரின் போராட்டம் தொடர்ந்தால் கர்நாடகத்தில் தமிழ்ப் படங்களைத் திரையிட அனுமதிக்கமாட்டோம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications