தமிழக- மைசூர் ரயில்கள் ரத்து, தசரா ஊர்வலம் ரத்து
சென்னை:
மாண்டியா மற்றும் மைசூர் மாவட்டங்களில் கன்னடர்களின் வன்முறை மற்றும் கலவரத்தால் காவிரி எக்ஸ்பிரஸ்,சதாப்தி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் பெங்களூர் வரை மட்டுமே இயக்கப்படும் என தென்னக ரயில்வேஅறிவித்துள்ளது.
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக் கூடாது என்று கூறி மைசூர், மாண்டியா பகுதிகளில் கன்னடர்கள் போராட்டம்நடத்தி வருகின்றனர். இது இப்போது வன்முறையாக மாறியுள்ளது.
மைசூர்-பெங்களூர் மார்க்கத்தில் பல இடங்களில் ரயில் தண்டவாளங்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. இதனால்இந்த மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கன்னடர்களின் வெறியாட்டம் காரணமாக, சென்னையிலிருந்து செல்லும் ரயில்கள் பெங்களூர் வரைமட்டுமே இயக்கப்படுகின்றன.
சதாப்தி எக்ஸ்பிரஸ், காவிரி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் பெங்களூர் வரை மட்டுமே செல்கின்றன என்று தென்னகரயில்வே அறிவித்துள்ளது.
தசரா ஊர்வலம் ரத்து:
இந் நிலையில் மைசூரில் ஆண்டுதோறும் நடக்கும் உலகப் புகழ்பெற்ற தசரா ஊர்வலத்தை கர்நாடக அரசு ரத்துசெய்துவிட்டது. கன்னடர்கள் வன்முறையால் இந்த ஊர்வலத்தை நடத்த இயலாத சூழ்நிலை உள்ளது.
இதனால் இது ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், வறட்சி காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாககர்நாடக அரசு கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications