ரஜினி அறிக்கை: கருத்து தெரிவிக்க கருணாநிதி மறுப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நடிகர்கள் மற்றும் திரையுலக கலைஞர்கள் நடத்தும் போராட்டத்தை ஆதரிப்பதாக திமுக தலைவர் கருணாநிதிகூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
காவிரிப் பிரச்சினைக்காக மின்சாரத்தை நிறுத்தக் கோரி நெய்வேலியில் முற்றுகை போராட்டம் நடத்தவுள்ளதிரையுலகினரின் போராட்டத்தை ஆதரிக்கிறேன்.
இருப்பினும் பஸ், ரயில் மறியல் போல "கரண்ட்" மறியலை எப்படி மேற்கொள்ளப் போகிறார்கள் என்றுதெரியவில்லை.
இருந்தாலும் கலையுலகினரின் போராட்டத்தை திமுக ஆதரிக்கிறது. அதேபோல அத்திவாசிய பிரச்சினைகள்தொடர்பாக திமுக நடத்தும் போராட்டத்தையும் கலையுலகினர் ஆதரிக்க வேண்டும் என்றார் கருணாநிதி.
இதற்கிடையே காவிரிப் பிரச்சினை தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் குறித்து கருத்துத்தெரிவிக்க கருணாநிதி மறுத்துவிட்டார்.












Click it and Unblock the Notifications