கடும் எதிர்ப்புக்கிடையே கிருஷ்ணாவின் யாத்திரை தொடர்கிறது

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

எதிர்க் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே கர்நாடக முதல்வர் கிருஷ்ணா தனது அரசியல்பாதயாத்திரையை இன்று இரண்டாவது நாளாகத் தொடர்ந்தார்.

இந்தப் பாதயாத்திரை மூலம் அரசியல் ஆதாயம் தேட கிருஷ்ணா முயல்வதாகவும் அதை உடனே நிறுத்த வேண்டும் எனவும்விவசாய சங்கங்கத்தின் தலைவர் மாடே கெளடா கூறியுள்ளார்.

அதே காவிரியில் தண்ணீர் விட வேண்டாம் என்பதில் கிருஷ்ணாவை முழுமையாக ஆதரிக்க எதிர்க் கட்சிகளும் இந்த பாதயாத்திரையை ஏற்கத் தயாராக இல்லை.

ஆனால், இந்த எதிர்ப்புகளை ஒதுக்கித் தள்ளிவிட்ட கிருஷ்ணா பிதாதி என்ற இடத்தில் இருந்து தனது யாத்திரையை இன்றுதுவக்கினார். நேற்று பெங்களூரில் இருந்து புறப்பட்ட அவர் பிதாதியில் இரவு தங்கினார்.

இன்று அவர் ராமநகரம் வரை நடப்பார். அவருடன் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும் அமைச்சர்களும் இந்தயாத்திரையில் பங்கேற்றுள்ளனர். யாத்திரை நடந்த இடங்களில் எல்லாம் பதற்றமும் பற்றிக் கொண்டது. பல இடங்களிலும் அச்சம்காரணமாக கடைகள் அடைக்கப்பட்டுவிட்டன.

இதற்கிடையே கிருஷ்ணாவை மாடே கெளடா இன்று சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது.

வழியில் விவசாயிகளிடையே பேசிய கிருஷ்ணா, உங்களுக்காக எந்த தியாகத்துக்கும் நான் தயார் என்றார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அறிக்கை விட்ட கையோடு இந்த அரசியல் யாத்திரையை கிருஷ்ணா தொடங்கியுள்ளார்.

தமிழகத்துக்கு எதிரான சென்டிமென்டுகளை தூண்டுவிட்டு அரசியல் லாபம் பெறவே இந்த யாத்திரையை அவர் நடத்திவருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+