சென்னை-நாகர்கோவில் இடையே தீபாவளி சிறப்பு ரயில்கள்
சென்னை:
தசரா மற்றும் தீபாவளியையொட்டி சென்னையிலிருந்து நாகர்கோவில் மற்றும் திருவனந்தபுரத்திற்கு சிறப்புரயில்களை தென்னக ரயில்வே இயக்கவுள்ளது.
சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவிலுக்கு வரும் 11 மற்றும் நவம்பர் 1 ஆகிய நாட்களில் சிறப்பு ரயில்கள்இயக்கப்படும்.
இரவு 10 மணிக்குக் கிளம்பி மறு நாள் பிற்பகல் 12.30 மணிக்கு இந்த ரயில்கள் நாகர்கோவில் போய்ச் சேரும்.
மறு மார்க்கத்தில் வரும் 15 மற்றும் நவம்பர் 5 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலிலிருந்து பிற்பகல் 3.35 மணிக்குக்கிளம்பி மறுநாள் காலை 6.30 மணிக்கு சென்னை வந்து சேரும்.
அதேபோல, திருவனந்தபுரத்திற்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வரும் 11ம் தேதி இரவு 9.15மணிக்கு சிறப்பு ரயில் கிளம்பி அடுத்த நாள் மாலை 4 மணிக்கு போய்ச் சேரும்.
மறு மார்க்கத்தில் திருவனந்தபுரத்திலிருந்து வரும் 14ம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு கிளம்பும் இந்தச் சிறப்பு ரயில்அடுத்த நாள் காலை 6.35 மணிக்கு சென்னை வந்து சேரும்.தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications