தமிழகத்துக்கு எதிராக பாத யாத்திரை நடத்த ராஜ்குமார் திட்டம்
பெங்களூர்:
தமிழகத்துக்கு எதிராக கர்நாடக முதல்வர் கிருஷ்ணா நடத்தி வரும் யாத்திரையில் நடிகர் ராஜ்குமாரும் பங்கேற்பார் என்றுதெரிகிறது.
வரும் 12ம் தேதியுடன் தனது யாத்திரையை கிருஷ்ணா நிறுத்துகிறார். அதற்குள் ஒரு நாள் ராஜ்குமாரும் இந்த யாத்திரையில்பங்கேற்று தமிழகத்துக்கு எதிரான தனது நிலையை மீண்டும் தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.
கிருஷ்ணாவின் யாத்திரைக்கு எதிர்க் கட்சிகளும் விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாலும் கர்நாடகத்துக்கு எதிராக உச்சநீதிமன்றம் கடும் நடவடிக்கை எடுத்தால் அதை சமாளிக்கும் வகையிலும் ராஜ்குமாரை இதில் சேர்த்து அனைத்துத்தரப்பினரையும் வாய் அடைக்கச் செய்ய கிருஷ்ணா திட்டமிட்டுள்ளார்.
இதையடுத்து ராஜ்குமாரிடம் அவர் பேசினார். உடனே அவரும் இதில் பங்கேற்க தயாராக இருப்பதாகத் தெரிவித்ததாக முதல்வர்அலுவலக வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.
ஏற்கனவே பெங்களூரில் சினிமாகாரர்களை திரட்டி ராஜ்குமார் நடத்திய பேரணியால் தான் காவிரி பிரச்சனையில் இருமாநிலங்களுக்கும் இடையே மோதல் அதிகரித்தது.
இந் நிலையில் மீண்டும் ராஜ்குமார் தமிழகத்துக்கு எதிரான பாத யாத்திரையில் பங்கேற்பது நிலைமையை இன்னும் மோசமாக்கப்போவது நிச்சயம்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications