ரஜினி உண்ணாவிரதம் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
சென்னை:
தமிழ் திரையுலகினர் நெய்வேலியில் போராட்டம் நடத்தும் அதே நாளில் உண்ணாவிரதம் இருக்க வேண்டாம்என்று விஜயகாந்த் கூறியதையடுத்து தனது உண்ணாவிரத்தை 12ம் தேதிக்குப் பதில் 13ம் தேதிக்கு ரஜினி ஒத்திவைத்துள்ளார்.
உண்ணாவிரதம் இருக்க ரஜினிக்கு சென்னை மாநகரப் போலீசாரும் அவருக்கு அனுமதி அளித்துள்ளனர்.சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை முன்பு உண்ணாவிரதம் இருக்க ரஜினிக்கு அனுமதிகொடுக்கப்பட்டுள்ளது.
ரஜினியை மாற்றிய டிவி பேட்டி:
இந் நிலையில் விஜய்காந்த் அளித்த டிவி பேட்டியில்,
ரஜினி சொல்வது போல கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டால், பாதிப்புக்கு உள்ளானால் தமிழ்நாட்டிலுள்ள தமிழர்கள் சும்மா இருக்கமாட்டார்கள். நிச்சயம் இங்குள்ள கன்னடர்களைத் தாக்குவார்கள்.
அடிக்கடி கர்நாடகத்தில் உள்ள 40 லட்சம் தமிழர்கள் தாக்கப்படுவார்கள் என்று ரஜினி கூறி வருகிறார். அப்படி அங்குள்ள தமிழர்கள் தாக்கப்பட்டால்,இங்குள்ள கன்னடர்களும் நிச்சயம் தாக்கப்படுவார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்கும் ஏராளமான கன்னடர்கள். ஆனால், அதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் நடந்து விடக் கூடாது என்பது தான் நம் ஆசை. இதனால் தான்இவ்வளவு அமைதியாக இருக்கிறோம்.
ரஜினிகாந்தும் நெய்வேலி போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். ஒரு நாள் அவர் தனது உண்ணாவிரதத்தை ஒத்தி வைத்தால் நாங்களும் கூட அதில்பங்கேற்கத் தயார்.
ஏற்கனவே திட்டமிட்டபடி நெய்வேலி போராட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும்போது, போட்டியாக போராட்டம் நடத்துவது போல,திடீரென ரஜினி உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்து விட்டார்.
எனவே, முதலில் அறிவித்த நாங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவது இயலாத காரியம். அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்தபின் போராட்டத்தைநடத்தாமல் விடுவது மடத்தனமானது.
கமல் வருவார்
கமல் நிச்சயம் இதில் கலந்து கொள்வார். அன்றே அவர் வருவதாக சொல்லி விட்டார். எனவே நிச்சயம் வருவார். அதில் சந்தேகமே வேண்டாம்என்றார் விஜயகாந்த்.
விஜய்காந்துடன் பேசிய ரஜினி:
இந்தப் பேட்டியைப் பார்த்த ரஜினி உடனே விஜய்காந்தை போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். தனது உண்ணாவிரதத்தை 13ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அவரிடம் ரஜினி தெரிவித்தார்.
அதே நேரத்தில் ரஜினிகாந்த் உண்ணாவிரதம் இருப்பதையொட்டி காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வெளியூரிலிருந்து ரசிகர்களோஅல்லது ரஜினிக்கு ஆதரவு தெரிவித்துள்ள அரசியல் கட்சியினரோ உண்ணாவிரதம் இருக்கும் இடத்திற்கு பெரும் எண்ணிக்கையில் வரக்கூடாது என்றுகாவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.
ஆனாலும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ரஜினி ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக சென்னைக்கு வரத் திட்டமிட்டுள்ளனர். மாநிலம் முழுவதுமேஆயிரக்கணக்கான வேன்களை ரஜினி ரசிகர்கள் புக் செய்துவிட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் உண்ணாவிரதம் நடக்கும் இடத்தில் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு உள்ளூர் ரசிகர்களும் அதிக அளவில் கூட வேண்டாம் என்றும் ரஜினியைப்பார்க்க வர வேண்டாம் என்று ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்தியநாராயணன் ராவ் கோரிக்கை விடுத்துள்ளார்.
போலீசாரிடம் ரஜினி மீண்டும் அனுமதி:
இதற்கிடையே உண்ணாவிரத தேதி ஒரு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரிடம் வேறுஒரு புதிய மனுவை ரஜினி கொடுத்து 13ம் தேதி உண்ணாவிரதம் நடத்த அனுமதி அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
அதற்கு அனுமதி அளித்த விஜயகுமார், வரும் 13ம் தேதி வள்ளுவர் கோட்டத்திற்கு முன்பாக அல்லது சேப்பாக்கம் விருந்தினர் மாளிகைக்கு முன்பாகஉண்ணாவிரதப் போராட்டம் நடத்தலாம் என்றும் எந்த இடம் என்பதைப் பின்னர் சொல்கிறோம் என்றும் ரஜினியிடம் தெரிவித்தார்.
சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை திருவல்லிக்கேணியில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியத்தின் எதிரே அமைந்துள்ளது. அது ஒரு குறுகலானஇடமாகும்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications