தலைமறைவான தீவிரவாதி தலைக்கு ரூ. 2 லட்சம் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக உள்ள அபுபக்கர் சித்திக் என்ற தீவிரவாதிகுறித்து தகவல் தெரிவித்தால் ரூ. 2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

கடந்த 1995ம் ஆண்டு நாகூரில் நடந்த புத்தக குண்டுவெடிப்பு, மயிலாடுதுறையில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தகவெடிகுண்டு, சென்னையில் 99ம் ஆண்டு நடந்த வெடிகுண்டு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில்சம்பந்தப்பட்டுள்ளவன் அபுபக்கர் சித்திக்.

இவன் தொடர்ந்து போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறான்.தனிப் படைகள் அமைத்தும் கூட இன்னும் அவனைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

இவர் குறித்தும், இவரது செயல்பாடுகள் குறித்தும் சரியான துப்பு தந்தால் அவர்களுக்கு ரூ. 2 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும். அபுபக்கர் குறித்துத் தகவல் தர விரும்புவோர் குறித்த தகவல் மிகவும் ரகசியமாகவைக்கப்படும் என்றும் சென்னை காவல்துறை கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+