தாகத்திற்கு தண்ணீர் கேட்கிறோம், பயிருக்கு உயிர் கேட்கிறோம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நெய்வேலியில் இன்று நடக்கவுள்ள போராட்டத்தின்போது பிரச்சனையை திசை திருப்பும் வகையிலான பிறகோஷங்களை யாரும் எழுப்பக் கூடாது என்றும் கண்டிப்பாக கூறப்பட்டுள்ளது.
ரஜினிக்கு எதிராக கோஷம் எழுப்புவது, ஜெயலலிதாவை வாழ்த்துவது அல்லது திட்டுவது, கருணாநிதியைவாழ்த்துவது அல்லது திட்டுவது, பிற கட்சியினரை விமர்சிப்பது போன்ற தேவையற்ற வேலைகளை விட்டுவிட்டுபோராட்டத்தின் நோக்கத்தை மட்டுமே அனைவரும் வெளிப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று எழுப்பப்பட உள்ள கோஷங்கள்:
- கலையுலகம் திரண்டு வருது, காவிரியில் நீர் கேட்டு, பிடிவாதத்தை விட்டு விடு காவிரி பிறந்த கர்நாடகமே!.
- தண்ணீர் கேட்கும் எம் கண்ணீர்க் குரலை, கர்நாடகத்திற்கு உணர்த்த எண்ணற்று எழுந்து வா தமிழ் இனமே!
- எமக்குரிய பங்கை கேட்பது குற்றமில்லை, அதை யார் மறுத்தாலும் அது நியாயமில்லை, உச்சநீதிமன்ற ஆணையே தவறு என்பது நீதியில்லை.
- தாகத்திற்கு தண்ணீர் கேட்கிறோம், பயிருக்கு உயிர் கேட்கிறோம், இதில் கருத்து வேற்றுமை காண்பதும் காரணங்கள் சொல்வதும் கண்ணீரை துடைக்குமா?
- இது யாருக்கும் எதிரானதல்ல போராட்டமல்ல, எங்கள் வாழ்வுரிமை போராட்டம்
- உரிமைக்கும் வாழ்வுக்கும் போராட வா!
- காவிரி கிடக்குது வறண்டு.. உனக்கு எதுக்கு கரண்ட்டு
- கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா.. கிருஷ்ணா, கெஞ்சிக் கேட்டும் கொடுக்கலையே எஸ்.எம். கிருஷ்ணா
இடையில் புகும் கட்சித் தொண்டர்களும் ரசிகர்களும் அவரவர் கோஷங்களைப் போட்டு குழப்பம் செய்யநிறையவே வாய்ப்புக்களும் உள்ளன.












Click it and Unblock the Notifications