நத்தைகளை சாப்பிடும் நாகை விவசாயிகள்
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக அப்பகுதி விவசாயிகள் பசியை அடக்குவதற்காகநத்தைகள், நண்டுகளை (கடல் நண்டுகள் அல்ல, வயல்களில் காணப்படும் நண்டுகள்) பிடித்து சாப்பிட்டுவருகின்றனர்.
காவிரியில் கர்நாடகம் நீர் திறந்து விடாததால் காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயம் கடுமையாகப்பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் வாடிக்கொண்டுள்ளனர்.
காவிரி டெல்டா பகுதிகளில் கடைசிப் பகுதியாக இருப்பது தான் நாகப்பட்டினம். கர்நாடக அரசின் நியாயமற்றபோக்கினால் காவிரி நீர் கிடைக்காமல் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டு, இப்போது சம்பாவும் பாதிக்கும் நிலைஏற்பட்டுள்ளது.
இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நாகப்பட்டினம் விவசாயிகள் தான். காவிரி நீர் சுத்தமாக வராதநிலையில், இங்கு விவசாயமே செய்ய முடியாமல் விவசாயிகள் கடும் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். இத்துடன்வறட்சி வேறு சேர்ந்து கொள்ளவே இவர்களது நிலை சொல்ல முடியாத அவல நிலைக்கு சென்று விட்டது.
இப்போது, பசிக்கொடுமையைப் போக்குவதற்காக ஆற்றோரங்களில் காணப்படும் நத்தைகள், நண்டுகளைப்பிடித்து வறுத்து சாப்பிட்டு வருகிறார்கள் இந்த பாவப்பட்ட விவசாயிகள்.
நண்டுகளையும், நத்தைகளையும் பொறிப்பதற்குத் தேவையான எண்ணெய், மிளகாய்ப் பொடி வாங்க்க கூடஇவர்களிடம் காசு இல்லை. எனவே அப்படியே வறுத்து சாப்பிடுகிறார்கள்.
இந்த அவலத்தை உணர்ந்த சர்வோதய சங்கம், விவசாயிகளுக்கு அரைக் கிலோ மிளகாய்ப் பொடியை இலவசமாகவழங்கி வருகிறது.
இதெல்லாம் மனிதாபிமானம் சற்றும் இல்லாத கர்நாடகத்தின் மரமண்டையில் நிச்சயம் ஏறப் போவதில்லை. மத்தியஅரசும் வேடிக்கை பார்த்து வரும் நிலையில் உச்ச நீதிமன்றமும் இயற்கையும் மட்டுமே இவர்களைக் காப்பாற்ற முடியும்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications