""ஸ்டிரைக்கில் ஈடுபடுபட்டால் "எஸ்மா" சட்டம் பாயும்"": அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை
சென்னை:
காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் குதித்தால் அவர்கள் மீது "அத்தியாவசியபணிப் பராமரிப்பு சட்டம்" (எஸ்மா) பாயும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
போனஸ், சரண்டர் விடுப்பு உள்ளிட்ட 19 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்சங்கம் (ஜேக்டோ-ஜியோ) உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில்ஈடுபடவுள்ளனர்.
அரசு ஊழியர்களின் அகவிலைப் படியை 4 சதவீதம் உயர்த்தினால் அவர்கள் வேலைநிறுத்தத்தைக் கைவிட்டுவிடுவார்கள் என்று தமிழக அரசு நினைத்தது. அதன்படி நேற்று மாலை இந்த அகவிலைப் படி உயர்வையும் தமிழகமுதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
ஆனால் இதற்கெல்லாம் மசியாத அரசு ஊழியர்கள், மற்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திட்டமிட்டபடிவேலைநிறுத்தம் தொடங்கும் என்று உறுதியாக அறிவித்து விட்டனர்.
இதையடுத்து தமிழக அரசு அடுத்த அஸ்திரத்தை இன்று எடுத்துள்ளது. வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் அரசுஊழியர்கள் மீது "எஸ்மா" சட்டம் பாயும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
அரசுக்குத் தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்காகவே சில கடினமான நடவடிக்கைகள்எடுக்கப்பட்டுள்ளன. இதற்கு ஊழியர்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
அதை விட்டுவிட்டு அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் தேவையில்லாதது.மக்களுக்கும் மக்கள் நலனுக்கும் எதிரானதும் கூட.
வேலைக்கு வராத நாட்கள் கணக்கிடப்பட்டு அந்த நாட்களுக்கு அரசு ஊழியர்களின் சம்பளத் தொகைகுறைக்கப்படும்.
மேலும் "எஸ்மா" சட்டத்தின் கீழும் வேலைநிறுத்தம் மேற்கொள்ளும் அரசு ஊழியர்கள் மீது கடுமையானநடவடிக்கை எடுக்கப்படும்.
வேலைநிறுத்தப் போராட்டத்தையும் மீறி பணிக்கு வர விரும்பும் அரசு ஊழியர்களைத் தடுத்து நிறுத்துபவர்களும்கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்.
எனவே அரசு ஊழியர்கள் தங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications