ஒத்திவைக்கப்பட்ட சென்னை பல்கலை. தேர்வுகள் 28ல் தொடக்கம்
சென்னை:
அரசுக் கல்லூரி ஆசிரியர் போராட்டம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள்வரும் 28ம் தேதி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
ஆசிரியர் போராட்டம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் அனைத்தும் 28ம் தேதி துவங்கும்.
இதுதொடர்பான விரிவான தேர்வு பட்டியலை சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்களிடமிருந்து மாணவர்கள்பெற்றுக் கொள்ளளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"ஒரிரு நாளில் அரசுக் கல்லூரிகள் திறப்பு"
இதற்கிடையே தமிழகத்தில் மூடப்பட்டுள்ள அரசுக் கல்லூரிகள் இன்னும் ஓரிரு நாட்களில் திறக்கப்படும் என்றுகல்வி அமைச்சர் தம்பித்துரை கூறினார்.
பல்கலைக்கழகங்களுடன் அரசுக் கல்லூரிகள் இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இனியும் போராட்டத்தைத்தொடர்ந்தால் மாணவர்களின் எதிர்காலம் தான் பாதிக்கப்படும் என்று ஆசிரியர்கள் நினைத்தனர்.
இதையடுத்து கடந்த திங்கள்கிழமை வேலைக்குத் திரும்ப ஆசிரியர்களும் மாணவர்களும் முடிவு செய்தனர்.
ஆனால் கல்லூரிகளைத் திறந்து, வகுப்புக்களைத் தொடங்க அரசு இன்னும் உத்தரவிடவில்லை. இதனால் அரசுக்கல்லூரிகள் இன்னும் மூடித் தான் கிடக்கின்றன.
இந்நிலையில் இதுகுறித்து தம்பித்துரை செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் தங்களதுபோராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளனர்.
எனவே மூடப்பட்டுள்ள அரசுக் கல்லூரிகள் இன்னும் ஓரிரு நாட்களில் திறக்கப்பட ஏற்பாடு செய்யப்படும்.
பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் சுய நிதிக் கல்லூரிகளில் உள்ள அனைத்து பாடங்களும், வகுப்புகளும்இனிமேல் அரசுக் கல்லூரிகளிலும் இடம் பெறும். இதுதொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்லூரிமுதல்வர்களுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என்றார் தம்பித்துரை.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications