பா.ஜ.க. கூட்டணியில் இருந்து திமுக வெளியேற வேண்டும்: காங்
சென்னை:
பாரதிய ஜனதாவுடனான கூட்டணியை திமுக உடனடியாக முறித்துக் கொண்டு அந்த அணியிலிருந்து வெளியேறவேண்டும் என்று காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்
அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டம் என்ற கருப்புச்சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. பாரதிய ஜனதாவின் ஊதுகுழலாகவே அதிமுக இருக்கிறது என்பதற்கு இதுவேசரியான உதாரணம்.
இந்த சட்டம் தேவையற்றது. ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்து பரிஷத் போன்ற அமைப்புகளை திருப்திப்படுத்தவேஇந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் அத்தனை கட்சிகளும் ஒன்று கூடியுள்ளன. இதுசந்தோஷத்தை அளிக்கிறது. இந்த நேரத்தில் திமுகவுக்கு ஒரு வேண்டுகோளை வைக்கிறேன்.
இப்போதாவது பா.ஜ.கவினரின் மறைமுக கொள்கைகளை உணர்ந்து, அந்தக் கட்சியுடனான கூட்டணியை முறித்துவிட்டு திமுக வெளியேற வேண்டும் என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications