மதுரையில் தண்டவாளத்தில் சதி வேலை: 2 பெரும் ரயில் விபத்துக்கள் தவிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரையில் நடக்க இருந்த இரு பெரும் ரயில் விபத்துக்கள் கேட் கீப்பர் ஒருவரின் துரிதமான செயல்பாட்டால் தவிர்க்கப்பட்டன.

மதுரை கூடல் நகர் அருகே ரயில் தண்டவாளத்தை இணைக்கும் பிஷ் பிளேட்டுகள் அகற்றப்பட்டிருந்தன. வழக்கமான ரோந்து சென்ற கூடல்நகர் ரயில்வே கேட் கீப்பர் இதனைக் கண்டவுடன் உடனடியாக உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தந்தார்.

இதையடுத்து அந்த வழியே வந்து கொண்டிருந்த பெங்களூர்- தூத்துகுடி எக்ஸ்பிரஸ் ரயிலையும் மதுரை- சென்னை வைகை எக்ஸ்பிரஸ்ரயிலையும் அதிகாரிகள் முன்னேறிச் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்.

வைகை எக்ஸ்பிரஸ் ரயில் கூடல் நகர் ரயில் நிலையம் அருகிலும் தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் சமயநல்லூரிலும் நிறுத்தப்பட்டன.

அதிகாரிகளும் பொறியாளர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அகற்றப்பட்ட பிஷ் பிளேட்டுகள் இருந்த இடத்தில் புதியபிளேட்டுகளைப் பொறுத்தினர். இந்த பிளேட்டுகள் தான் தண்டவாளங்களை ரீப்பர் பாலத்துடன் இணைப்பவையாகும்.

இவை அகற்றப்பட்டதால் தண்டவாளம் கீழே உள்ள ரீப்பர் கட்டையுடன் ஒட்டாமல் தனியே தொங்கிக் கொண்டிருந்தது. இதன் வழியேஅதிவேக ரயில்கள் சென்றிருந்தால் நிச்சயம் தடம் புரண்டிருக்கும்.

புதிய பிளேட்டுகளைப் பொறுத்தும் பணி சுமார் 1 மணி நேரத்தில் முடிவடைந்தது. இதையடுத்து இரு ரயில்களும் ஒரு மணி நிறுத்தப்பட்டுமீண்டும் பயணத்தைத் தொடர்ந்தன.

இந்த பிஷ் பிளேட்டுகளை நீக்க சிறப்பான ஸ்பானர் வேண்டும். இவை ரயில்வே வசம் மட்டுமே உள்ளன. இதனால் இந்த பிளேட்டுகளைநீக்கியதில் ரயில்வே ஊழியர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிப்பதாகத் தெரிகிறது.

மேலும் போலீசாரிடம் கேட் கீப்பர் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், இரு சந்தேகத்திற்கிடமான நபர்கள் சம்பவ இடத்தில் நடமாடியதாகவும்கூறியுள்ளார். இதனால் இது தீவிரவாதிகள் கைவரிசையும் இருக்கலாம் என ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+