"அரசுக்கு ஏற்பட்டுள்ளது மதி பற்றாக்குறை தான்": கருணாநிதி
சென்னை:
தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது நிதிப் பற்றாக்குறை அல்ல மதிப் பற்றாக்குறை தான் என்று திமுக தலைவர்கருணாநிதி கூறினார்.
காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் மீது "எஸ்மா" எனப்படும் அத்தியாவசிய பணிப்பராமரிப்பு சட்டம் பாயும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அதன்படி 300க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 4,000 பேருக்கு"மெமோ"வும் கொடுக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டதைக் கடுமையகக் கண்டித்த கருணாநிதி இன்று நிருபர்களிடம் கூறுகையில்,
லட்சக்கணக்கான அரசு ஊழியர்களின் உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கும் காட்டுமிராண்டி செயல்களில்ஜெயலலிதா அரசு ஈடுபட்டுள்ளது.
அரசுக்குத் தற்போது ஏற்பட்டுள்ளது நிதிப் பற்றாக்குறை அல்ல, மதிப் பற்றாக்குறை தான்.
எந்தவிதமான நிபந்தனையும் இன்றி அரசு ஊழியர்களை அழைத்துப் பேசி, அவர்களுடைய நியாயமானகோரிக்கைகளைக் காது கொடுத்து அரசு கேட்க வேண்டும்.
அவ்வாறு பேசித் தான் அவர்களுடைய பிரச்சனைகளைத் தீர்க்க முடியும். இல்லையென்றால் வேதனையும்,சோதனைகளும் தான் ஏற்படும்.
அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இந்தக் காட்டுமிராண்டித்தனங்களை திமுக சார்பில் நான் கண்டிக்கிறேன்.
இது போன்ற அடக்குமுறைச் செயல்களை திமுக போன்ற கட்சிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மாஉட்கார்ந்து கொண்டிருக்காது என்றார் கருணாநிதி.
-
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
எடப்பாடி செய்த அந்த 3 தவறுகள்.. "முக்குலத்தோர் கோபம்.." உடைந்து சிதற போகுது கட்சி? அடுத்து என்ன -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications