எம்.பி. பதவியை ராஜினாமா செய்யும் அம்பரீஷ்: கொக்கரிக்கும் கெளடா
பெங்களூர்:
காவிரி விவகாரத்தில் கர்நாடகத்துக்கு அநியாயம் நடந்துவிட்டதாகக் கூறி தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்யப் போவதாக நடிகர்அம்பரீஷ் அறிவித்துள்ளார்.
ரஜினி மூலமாக பல தமிழ்ப் படங்களில் தலைகாட்டியவர் இந்த அம்பரீஷ். தமிழில் அவருக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால்கன்னடத்தோடு நிறுத்திக் கொண்டார்.
கலியுக கர்ணன் போன்ற பட்டங்களை தானாகவே சூட்டிக் கொண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். மாண்டியா தொகுதியில் நின்றுவெற்றியும் பெற்றார்.
சமீபத்தில் தமிழகத்துக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்கள் மாண்டியாவில் தான் தீவிரமாக நடக்கின்றன. இதனால் தனது மாண்டியாதொகுதி எம்.பி. பதவியை இப்போது ராஜினாமா செய்து அரசியல் ஸ்டண்ட் அடித்தால் எதிர்காலத்தில் பெரும் அரசியல் லாபம் கிடைக்கும்என இவர் கணக்கிட்டுள்ளார்.
தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பப் போவதாக இன்று அவர் செய்தியாளர்ளிடம் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், தமிழகத்துக்கு தண்ணீர் விட்டது சரியில்லை. அரசின் இந்த முடிவு ஏற்புடையது அல்ல. ஆனால், சட்டத்துக்கு உட்பட்டநீரை திறந்துவிட்டு தான் ஆக வேண்டும். நான் முதல்வர் கிருஷ்ணாவை சந்தித்து எனது பதவியை ராஜினாமா செய்யும் முடிவைத்தெரிவித்துவிட்டேன்.
முதலில் நீரை விட மாட்டேன் என்று முதல்வர் கிருஷ்ணா கூறியது சரி தான். இப்போது கொஞ்சம் மழை பெய்துள்ளது. அணைகளில் நீர்கூடியுள்ளது. ஆனால், தமிழகத்துக்கு தரும் அளவுக்கு அணைகளில் தண்ணீர் இல்லை (!!). கர்நாடக விவசாயிகளின் நலனை அரசுபாதுகாக்க வேண்டும்.
மாண்டியா மாவட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் நான் பதவி விலக வேண்டாம் என்று கோரினர். ஆனால், நான் விலகப் போகிறேன் என்றார்.
காவிரியை வைத்து தமிழகத்துக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டி சினிமாவை ஓட்டி பிழைப்பு நடத்துபவர்களில் அம்பரீசும் ஒருவர்என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது படங்கள் பெரும்பாலும் தமிழ் படங்களின் உல்டாக்கள் என்பதும் நினைவுகூறத்தக்கது.
இடையில் புகுந்த தேவே கெளடா:
காவிரியை வைத்து யார் அதிகம் அரசியல் லாபம் அடிப்பது என்பதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளதால் முன்னாள் பிரதமர் தேவேகெளடாவும் இந்த அரசியல் குஸ்தியில் இறங்கியுள்ளார்.
உடனே காவிரி ஆணையத்தை பிரதமர் கூட்ட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், வறட்சி காலத்தில் நீரை பகிர்த்து கொள்வது குறித்து புதிய திட்டத்தை பிரதமர் அறிவிக்க வேண்டும் எனறார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications