பணம் வாங்கிக் கொண்டு கைதியை தப்ப விட்ட 2 போலீஸார் கைது
சென்னை:
விசாரணைக் கைதியை தப்ப விட்ட 2 போலீஸார் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள் ஆறுமுகத்துரை, தங்கத்துரை மற்றும் அம்புரோஸ். இவர்கள் மூன்று பேரும்வர்த்தகர் ஒருவரைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மூவரும் தூத்துக்குடி கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டனர். இவர்களுக்கு கைவிலங்கிட்டு தலைமைக்காவலர்கள் வெள்ளத்துரை மற்றும் வடிவேலு ஆகியோர் பஸ்சில் அழைத்து வந்தனர்.
கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு திரும்பும் வழியில் அம்புரோஸையும் தங்கத்துரையும் ஒரே கைவிலங்கில்கட்டப்பட்டும், ஆறுமுகத்துரைக்கு தனியாக கைவிலங்கிட்டும் போலீசார் அழைத்துச் சென்றனர்.
அப்போது ஆறுமுகத்துரை மட்டும் தப்பி விட்டார்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் நடத்திய விசாரணையின் போது, ரூ.1,115 பணம் பெற்றுக் கொண்டு, வேண்டும்என்றே தான் ஆறுமுகத்துரையை தப்ப விட்டது தெரிய வந்தது.
இதையடுத்து இரண்டு போலீசாரும் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications