மதமாற்ற தடை சட்டம்: இன்று சட்டசபையில் விவாதம்
சென்னை:
கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டம் மீது தமிழக சட்டசபையில் விவாதம் இன்று நடைபெறுகிறது.
கட்டாய மதமாற்றத் தடுப்பு சட்ட மசோதா நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீது இன்றுவிவாதம் நடக்கிறது. இந்த மசோதாவை அவை முன்னவர் பொன்னையன் முதல்வர் ஜெயலலிதாவின் சார்பில்தாக்கல் செய்தார்.
தாழ்த்தப்பட்ட, வறுமையில் வாடும் மக்களை தவறான வழியில் மதம் மாற்றுவதைத் தடுக்கவே இந்த சட்டம்கொண்டுவரப்படுவதாக அரசு கூறியுள்ளது.
பொதுமக்கள் மத்தியில் மதமாற்ற அச்ச உணர்வு இல்லாமலும் இதுபோன்ற முயற்சிகளை முளையிலேயே கிள்ளிஎறியும் வகையிலும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டப்படி, ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு கட்டாயப்படுத்தி, ஆசை வார்த்தைகள் கூறி, பணஆசை காட்டி மாற்றுவது குற்றச் செயலாகும். இதுபோன்ற செயலில் ஈடுபட்டு கைதாகும் நபர்களுக்கு 3 ஆண்டுசிறைத் தண்டனை மற்றும் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்.
18 வயதுக்குக் கீழ்உள்ளோர், பெண்கள் அல்லது தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களை மதம் மாற்றினால்,மதம் மாற்றம் செய்தவர்களுக்கு 4 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். அபராதம் ரூ.1 லட்சம்விதிக்கப்படும் என்று சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தச் சட்ட மசோதா மீதான விவாதம் இன்று சட்டசபையில் நடக்கிறது.
திமுக, பாமக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்தச் சட்ட மசோதாவை துவக்க நிலையிலேயே எதிர்த்துள்ளன.பா.ஜ.க. மட்டும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications