For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முதன்முறையாக தீபாவளி கொண்டாடிய பிரிட்டிஷ் நாடாளுமன்றம்

By Staff
Google Oneindia Tamil News

லண்டன்:

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் முதல்முறையாக தீபாவளி கொண்டாடப்பட்டு வரலாறு படைக்கப்பட்டுள்ளது.

House of Commonsபிரிட்டனின் வளர்ச்சியில் இந்தியர்கள் முக்கிய பங்கு வகிப்பதற்கு நன்றி செலுத்தும் விதமாக தீபாவளியை அந் நாட்டு நாடாளுமன்றம்கொண்டாடியுள்ளது.

நேற்று ஹவுஸ் ஆப் காமன்ஸ்சில் இந்த விழா விளக்குகள் ஏற்றப்பட்டு கொண்டாடப்பட்டது. பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த 130க்கும்மேற்பட்ட பிரிட்டிஷ் எம்.பிக்கள் இதில் கலந்து கொண்டற்.

அழகிய ராமர் சிலையை ஹவுஸ் ஆப் காமன்ஸ்சின் டைனிங் ஹாலின் நடுவில் அலங்காரம் செய்து வைத்து மாலைகள் அணிவித்து,ரங்கோலிக் கோலங்கள் போட்டு இந்த நிகழ்ச்சி வண்ணமயமாகக் கொண்டாடப்பட்டது.

தீபாவளியையொட்டி பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், திபாவளி ஒரு அட்டகாசமான திருவிழா.குடும்பங்களை, குடும்ப அன்பை மையப்படுத்தி நடக்கும் இந்த விழா நமது எதிர்காலம் குறித்த நம்பிக்கையையும் கடந்த காலம் குறித்தபெருமையையும் உணர்த்துகிறது.

பல்வேறு இன, சமூக மக்கள் இணைந்து வாழ்வதால் பிரிட்டன் பலம் பெற்ற சமூகமாக விளங்குகிறது. இந்த இன ஒற்றுமைய உணர்த்ததீபாவளி நமக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.

விழாவில் பேசிய இங்கிலாந்தின் இந்து கவுன்சிலின் பொதுச் செயலாளர் ரமேஷ் கூறுகையில், இந்துக்களின் திருவிழாவை பிரிட்டன்நாடாளுமன்றம் கொண்டாடியது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் இந்திய- பிரிட்டன் நட்புறவில் வரலாறு படைக்கப்பட்டுள்ளது.இந்தியர்களை பிரிட்டன் சமூகத்துடன் ஒன்றரக் கலப்பது தான் இந்த விழாவின் நோக்கம் என்றார்.

கவுன்சிலின் தலைவர் ரதிலால் கூறுகையில், பிரிட்டன் நாடாளுமன்றத்துடன் 35 இந்து அமைப்புகளும் 14 எம்.பிக்களும் சேர்ந்து இந்தவிழாவை நடத்தின என்றார்.

பிரிட்டனின் உள்துறை அமைச்சர் டேவிட் ப்ளுக்கெட் இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், இந்தியாவின்குடும்ப உறவு முறை உலகுக்கே ஒரு பெருமையான எடுத்துக்காட்டு என்றார்.

முன்னாள் அமைச்சர் கெய்த் வாஸ், எம்.பியான ஜான பேட்டில் ஆகியோர் பேசுகையில் இந்துமதம் மற்றவர்களுக்கு ஒரு வழிகாட்டிஎன்றனர்.

எதிர்க் கட்சித் தலைவர் மைக்கேல் அன்க்ரம் பேசுகையில், நான் 3 தினங்களுக்கு முன்பு தான் இந்தியா சென்று திரும்பினேன். இந்தியாவின்ஜனநாயகத்துக்கு உலகம் தலைவணங்க வேண்டும். ஜம்மூ- காங்மீரில் துப்பாக்கிக் குண்டுகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையேஜனநாயகத்தைக் காப்பாற்றிக் காட்டியிருக்கிறது இந்தியா. அங்கு நியாயமான தேர்தலை நடத்தி உலகில் தனது பெருமையை இந்தியாநிலைநாட்டிவிட்டது என்றார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொது மக்களும் பாரம்பரிய உடைகளுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.ஒருவருக்கு ஒருவர் இனிப்புகளை ஊட்டி மகிழ்ந்தனர்.

கிட்டத்தட்ட 2 மணி நேரம் நடந்த இந்த நிகழ்ச்சி அகமதாபாத் சுவாமி நாராயண் கோவிலில் இருந்து வந்த இரு பூசாரிகள் நடத்தியபூஜையுடன் முடிவடைந்தது. கடந்த மாதம் இந்தக் கோவிலில் தான் தீவிரவாதிகள் புகுந்து பக்தர்களை கொன்று குவித்தனர் என்பதுநினைவுகூறத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X