அரசை கண்டித்து தலைமை ஆசிரியர் தீக்குளிப்பு
பொள்ளாச்சி:
அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் போராட்ட விவகாரத்தில் அரசு மெத்தனமாக நடந்து கொள்வதைக் கண்டித்துபொள்ளாச்சியில் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார்.
போனஸ், அகவிலைப் படி உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசுஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள 4 சதவீத அகவிலைப் படிக்கும் அதிகமாக தரப் போவதில்லை என்று உறுதியாகஅறிவித்து விட்ட தமிழக அரசு, வேலைநிறுத்தத்தை உடனடியாகக் கைவிட்டு வந்தால் தான் அரசு ஊழியர்களுடன்பேச்சு நடத்தப்படும் என்றும் கூறிவிட்டது.
அரசின் இந்தப் பிடிவாதப் போக்கைக் கண்டித்து பொள்ளாச்சி அருகே உள்ள நம்பியமுத்தூர் ஆரம்பப் பள்ளியின்தலைமை ஆசிரியர் காசிப் பாண்டியன் (52) இன்று காலை தன் உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக்கொண்டார்.
பொள்ளாச்சியில் உள்ள துணை கல்வி அதிகாரி அலுவலகத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தங்கள்கண்ணெதிரிலேயே காசிப் பாண்டியன் தீக்குளித்ததைக் கண்டு மற்ற அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் அதிர்ச்சிஅடைந்தனர்.
உடனே அவரைக் காப்பாற்ற அவர்கள் முயற்சித்தனர். ஆனால் அதற்குள் காசிப் பாண்டியனின் 80 சதவீத உடல்வெந்து விட்டது.
அவர் உடனடியாக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்குத் தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே கோயம்புத்தூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் முற்றுகைப் போராட்டம் நடத்திய சுமார் 1,250அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
தலைமை ஆசிரியரே அரசுக்கு எதிராக தீக்குளித்தது அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications