கரூர் அதிமுக எம்.பி. தேர்தல் செல்லுமா?- மறு ஓட்டு எண்ணிக்கை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
கரூர் அதிமுக எம்.பியான சின்னசாமி வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மறு ஓட்டு எண்ணிக்கைநடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1999ல் நடந்த கரூர் தொகுதி நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் பழனிச்சாமியை 2,847வாக்குகள் வித்தியாசத்தில் சின்னசாமி தோற்கடித்தார்.
இந்நிலையில் சின்னசாமி வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் பழனிச்சாமிவழக்கு தொடர்ந்தார். அவர் தன் மனுவில்,
இந்தத் தேர்தலில் கள்ள ஓட்டுப் போட்டதாக மூன்று அதிமுகவினர் பிடிபட்டனர்.
மேலும் ஓட்டு எண்ணிக்கையின் போது தில்லுமுல்லும் நடந்துள்ளது. எனக்கு சாதகமான ஓட்டுக்களை செல்லாதவைஎன்று கூறி நிராகரித்து விட்டனர்.
எனவே சின்னசாமி வெற்றி பெற்றதை ரத்து செய்து விட்டு, கரூர் நாடாளுமன்றத் தொகுதி ஓட்டுக்களை மீண்டும்எண்ணுவதற்கு உத்தரவிட வேண்டும்.
நானே வெற்றி பெற்றதாகவும் அறிவிக்க வேண்டும் என்று அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ராமமூர்த்தி தன் தீர்ப்பில், கரூர் தொகுதி ஓட்டுக்களை மீண்டும் எண்ணுவதற்குஉத்தரவிடுகிறேன். இந்தத் தீர்ப்பின் நகல் கிடைத்த ஒரு வாரத்திற்குள் இந்த ஓட்டுக்கள் எண்ணப்படுவதற்கு உயர்நீதிமன்றப் பதிவாளர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
கரூர் தொகுதி ஓட்டு எண்ணிக்கை விவரம்:
மொத்த ஓட்டுக்கள் - 11,70,582
பதிவானவை - 7,19,705
செல்லாதவை - 16,906
எம். சின்னசாமி (அதிமுக) - 3,34,407
கே.சி. பழனிச்சாமி (திமுக) - 3,31,560
கே. நாட்ராயன் (தமாகா) - 45,539
-->
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications