For Daily Alerts
Just In
மாணவி தற்கொலை: பாண்டிச்சேரி சட்டசபை முன் மாணவ- மாணவிகள் ஆர்ப்பாட்டம்
பாண்டிச்சேரி:
பாலிடெக்னிக் மாணவி தற்கொலை தொடர்பாக பாலிடெக்னிக் முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிபாண்டிச்சேரி சட்டசபை முன்பு மாணவ, மாணவியர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாண்டிச்சேரி லாஸ்பேட்டையில் அரசு தொழில்நுட்ப பள்ளி உள்ளது. இதில் படித்து வந்தவர் ஸ்ரீதேவி.
இவர் சமீபத்தில் திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலைக்கு பள்ளி முதல்வர் தான் காரணம்என்று கூறி பள்ளி மாணவ, மாணவியர் சட்டசபை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வகுப்புகளையும்புறக்கணித்தனர்.
இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து மாணவ, மாணவியரை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.
மேலும் ஸ்ரீதேவியின் தற்கொலை தொடர்பாக தீவிர விசாரணையையும் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
-->


