தூத்துக்குடி கடலில் மூழ்கி ஒருவர் சாவு: மற்றொருவர் கதி என்ன?
தூத்துக்குடி:
தூத்துக்குடி கடலில் மூழ்கிய இருவரில் ஒருவருடைய பிணம் கரையில் ஒதுங்கியது. மற்றொருவரின் கதிஎன்னவென்று தெரியவில்லை.
தூத்துக்குடியைச் சேர்ந்த பார்த்திபன், திலக், வினோத் மற்றும் ஜூட் ஆகிய நான்கு பேரும் கடந்த 4ம் தேதிபிளாஸ்டிக் படகு ஒன்றில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.
அப்போது கடல் கொந்தளிப்பு அதிகமாக இருந்ததால், அந்தப் படகு கடலில் மூழ்கியது.
இதில் கடலில் தத்தளித்த பார்த்திபனும், திலக்கும் பிற மீனவர்களால் மீட்கப்பட்டனர். கடலில் மூழ்கிய வினோத்மற்றும் ஜூட் ஆகியோரைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது.
விசைப் படகுகள் மற்றும் நாட்டுப் படகுகளில் மீனவர்களும், கடலோரக் காவல் படையினரும் கடலில்மூழ்கியவர்களைத் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் ஜூட்டின் உடல் கடற்கரையில் ஒதுங்கியது. உடலைப் பார்த்த அவருடைய உறவினர்கள் கதறிஅழுதனர்.
ஆனால் வினோத்தின் கதி என்னவென்று இன்னும் தெரியவில்லை. அவரைத் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
-->


