பா.ம.க. தலைவர்களுக்கு போலீஸ் வலை வீச்சு
சென்னை:
சென்னையில் உள்ள பிடி.லி. செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை நிர்வாகம் தொடர்பாக பாமக தலைவர் ஜி.கே.மணி மற்றும் எம்.எல்.ஏ. காடுவெட்டி குரு ஆகியோரை போலீஸார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை நிர்வாகம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் ஒன்பது பேர் கொண்டகுழுவை அமைத்தது.
இந்தக் குழுவுக்குத் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி தங்கமணி நியமிக்கப்பட்டார். இக்குழுவினர் வழக்கு முடியும்வரை அறக்கட்டளை நிர்வாகத்தைப் பார்த்துக் கொள்வார்கள் என்று உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது.
இக்குழுவினர் பதவி ஏற்பதற்காக வந்தபோது, மணி, காடுவெட்டி குரு உள்ளிட்டவர்கள் அதைத் தடுத்தனர்.
குழுவில் வன்னியர்கள் அல்லாத சிலர் இடம் பெற்றிருந்ததால் அவர்கள் பதவியேற்கக் கூடாது என்றும் மணிதரப்பினர் கூறினர். அப்போது அடிதடியும் நடந்ததாகக் கூறப்பட்டது.
இதையடுத்து மணி உள்ளிட்டவர்கள் மீது போலீஸில் புகார் காடுக்குமாறும், இதுதொடர்பாக உடனடியாகநடவடிக்கை எடுக்குமாறும் போலீஸாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து மணி, காடுவெட்டி குரு உள்ளிட்டவர்கள் மீது வேப்பேரி போலீஸ் நிலையத்தில் அறக்கட்டளைசெயலாளர் குமார் புகார் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து மணியும், குருவும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை ஒன்பது தனிக் குழுக்கள் அமைத்துதேடி வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-->


