சென்னை சாலைகளை சீரழித்தது யார்? திமுக-அதிமுக சர்ச்சை தொடர்கிறது
சென்னை:
சென்னை நகரில் சாலைகள் போட திமுக அரசு ரூ.104 கோடி நிதியை ஒதுக்கியதாகக் கூறுவது பச்சைப் பொய்என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் கூறியுள்ளார்.
சமீபத்தில் பெய்த கடும் மழையால் சென்னை நகரின் பல சாலைகள் பெயர்ந்து போயுள்ளன. இவற்றைச் சரிசெய்வதற்காகத் தமிழக அரசு சமீபத்தில் ரூ.104 கோடி ஒதுக்கீடு செய்தது.
ஆனால் இந்தத் தொகை ஏற்கனவே நாங்கள் ஆட்சியில் இருந்த போது ஒதுக்கிய தொகை தான் என்று திமுககூறியது. இது தொடர்பாக சம்பத் விடுத்துள்ள அறிக்கையில்,
சென்னை நகரில் மோசமான நிலையில் உள்ள சாலைகளை சரி செய்யவும், புதிய சாலைகள் போடவும் அதிமுகஅரசு ரூ.104 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. ஆனால் இந்த நிதியை தாங்கள் தான் ஒதுக்கியதாக திமுகஅப்பட்டமாகப் புளுகுகிறது.
கடந்த 1996 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில், 2,178 கி.மீ. தொலைவிலான சாலை சரி செய்யப்பட்டுள்ளது.இதற்காக ரூ.209.86 கோடி செலவிடப்பட்டுள்ளது.
வருடத்திற்கு சராசரியாக, ரூ.42 கோடி செலவில், 435 கிலோமீட்டர் சாலைகள் சரி செய்யப்பட்டுள்ளன.
ஆனால் புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்கள், அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதிவரையிலான காலகட்டத்தில் 833 கி.மீ. சாலைகளை சீர் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இதற்காகவே ரூ. 104 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்தப் பணம் முழுக்க முழுக்க அதிமுகஅரசினால் ஒதுக்கப்பட்ட நிதி தான் என்பது உறுதியாகிறது.
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசுக்கு அவப் பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்தமாதிரியான தவறான செய்தியைப் பரப்பி வருகிறது திமுக என்று கூறியுள்ளார் சம்பத்.
இரு கட்சிகளுமே தங்கள் கட்சியைச் சேர்ந்த காண்ட்ராக்டர்களுக்கு டெண்டர் தந்து கோடிக்கணக்கில் பணத்தைசுருட்டியது தான் சாலைகள் இவ்வளவு மோசமானதற்குக் காரணம். இதை இந்த இரு கட்சியினருமேமறைத்துவிட்டு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர் என்பது தான் உண்மை.
-->
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications