""பழனி சிலை விவகாரமா.. "அம்மா" தான் பேசணும்"": அமைச்சர்
திண்டுக்கல்:
பழனி முருகன் கோவில் மலை உச்சியில் இருக்கும் மூலவர் சிலை குறித்து முதல்வர் ஜெயலலிதாவோ அல்லதுகாஞ்சி சங்கராச்சாரியரோ தான் பேச வேண்டும். நான் அதுகுறித்து பேசக் கூடாது என்று இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் பி.சி. ராமசாமி கூறினார்.
மூலவர் சிலை குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்த நிலையில் பழனிக்கு வந்திருந்த ராமசாமியிடம்கேட்டபோது,
இதுகுறித்து நான் பேசவே கூடாது. காஞ்சி சங்கராச்சாரியார் அல்லது ஜெயலலிதா தான் இதுகுறித்துப் பேசலாம்.நான் கருத்து கூறவே கூடாது.
பழனி மலைக்குச் செல்ல புதிதாக ரோப் கார் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனம் ரூ.4கோடி செலவில் இந்தத் திட்டத்தை அமல்படுத்தவுள்ளது.
இப்போது இருக்கும் விஞ்ச்சை விட இந்த கார் வேகமாக செல்லும். கிழக்கு கிரி வீதியிலிருந்து கோவில் வரைஇந்தக் கார் இயக்கப்படும்.
கோவிலின் வடக்குப் பிரகாரத்தை விரிவுபடுத்த ரூ.34 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வடக்கு கிரி வீதியில்ரூ.42 லட்சம் செலவில் 34 கடைகள் அமைக்கப்படும் என்றார் ராமசாமி.
-->


Click it and Unblock the Notifications
