சென்னையில் போலி வயாகரா
சென்னை
சென்னையில் போலி வயாகரா மாத்திரைகளை விற்பனை செய்த ராஜஸ்தானைச் சேர்ந்தவரை போலீஸார் கைதுசெய்தனர்.
அவரிடமிருந்து 12 பாட்டில் போலி வயாகரா மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை காசி செட்டித்தெருவில் வசித்து வருபவர் பரத்குமார். இவர் இதே பகுதியில் பேன்சி ஸ்டோர் நடத்திவருகிறார். அங்கேயே இந்த போலி வயாகரா மாத்திரைகளையும் விற்பனை செய்து வந்துள்ளார்.
இவரிடம் மாத்திரை வாங்கி சாப்பிட்டு எந்த எபெக்டும் இல்லாமல் ஏமாந்த சிலர் இது குறித்து போலீசாரிடம்புகார் கொடுத்தனர்.
இதையடுத்து போலீஸார் அவரது வீட்டுக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது 12 பாட்டில்களில்360 மாத்திரைகள் வைக்கப்பட்டிருந்தன.
30 மாத்திரைகள் ரூ. 900 என்று இவர் விற்று வந்துள்ளார். அமெரிக்காவில் தயாரிக்கப்படும் உண்மையானவயாகரா மாத்திரைகள் அடைக்கப்படும் அதே பாட்டில்களில் தான் இந்த போலி மாத்திரைகளையும் பரத்குமார்விற்றுள்ளார்.
இதையடுத்து பரத்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
-->


