சென்னையில் 3 பயங்கர ரவுடிகள் போலீசாரால் சுட்டுக் கொலை
சென்னை:
சென்னையைக் கலக்கி வந்த 3 பயங்கரமான ரவுடிகளைப் போலீசார் துப்பாக்கிச் சண்டை நடத்தி சுட்டுக்கொன்றனர்.
சென்னை புறநகர் மற்றும் செங்கை கிழக்கு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே அடுத்தடுத்து கொள்ளைச்சம்பவங்கள் நடந்து வந்தன. தாம்பரம், பெருங்களத்தூர், ஆதம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் குறி வைத்து ஒருகும்பல் கொள்ளையடித்து வந்தது.
பெரும்பாலும் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களை மிரட்டியே இந்தக் கும்பல் கொள்ளையடித்து வந்தது.இதனால் தனியாக வீட்டில் இருப்பதற்கே பெண்கள் மிகவும் பயந்தனர்.
இதையடுத்து இந்தக் கொள்ளையர்களைப் பிடிப்பதற்காக செங்கை கிழக்கு மாவட்ட எஸ்.பியான பொன்மாணிக்கவேல் தலைமையில் மூன்று தனிப் போலீஸ் படைகள் அமைக்கப்பட்டன.
இவர்களுடைய தீவிர முயற்சியால் கிருஷ்ணன், முருகன் மற்றும் கோவிந்தன் ஆகிய மூன்று கொள்ளையர்கள் கைதுசெய்யப்பட்டனர். வழிப்பறி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கொள்ளைகளை இவர்கள் நடத்தியுள்ளதுவிசாரணையில் தெரிய வந்தது.
மேலும் தாங்கள் கொள்ளையடித்த பொருட்களை நீலாங்கரை அருகே உள்ள ஜூகு பீச்சில் பதுக்கிவைத்துள்ளதாகக் கொள்ளையர்கள் வாக்குமூலம் அளித்திருந்தனர். இதையடுத்து அந்தப் பொருட்களைமீட்பதற்காக கொள்ளையர்களை அங்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
பீச் மணலில் நடந்து கொண்டிருந்த போது கிருஷ்ணன் என்பவன் திடீரென்று குனிந்து ஒரு சப்-இன்ஸ்பெக்டரின்துப்பாக்கியைப் பறித்துக் கொண்டான். இதையடுத்து மற்ற இரண்டு கொள்ளையர்களும் அவன் அருகே ஓடினர்.துப்பாக்கி முனையில் அவர்கள் மூவரும் தப்பிக்க முயற்சித்தனர்.
அவர்களைத் தடுக்க முயன்ற சந்திரசேகர் என்ற சப்-இன்ஸ்பெக்டரை அவர்கள் சுட்டுக் காயப்படுத்தி விட்டு ஓடஆரம்பித்தனர். போலீசாரும் அவர்களை விடாமல் துரத்தினர்.
இதையடுத்து கொள்ளையர்கள் திடீரென்று திரும்பி நின்று போலீசாரை நோக்கி சராமாரியாகத் துப்பாக்கியால்சுட்டனர். இதில் செந்தில்குமார் மற்றும் வயிரவன் ஆகிய இரு போலீசார் குண்டுக் காயம் அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து மற்ற போலீசார் தங்களைக் காத்துக் கொள்வதற்காகக் கொள்ளையர்களை நோக்கித்துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் பலத்த குண்டுக் காயமடைந்த மூன்று கொள்ளையர்களுமே இரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து அந்தஇடத்திலேயே உயிரிழந்தனர்.
சினிமா காட்சிகளையும் மிஞ்சும் வகையில் நடந்த இந்தத் துப்பாக்கிச் சண்டையால் அப்பகுதியில் பெரும் பரபரப்புநிலவியது.
காயமடைந்த போலீசார் உடனடியாக சென்னை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-->
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications