15 வயது பெண்ணுக்கு அபார்ஷன் செய்த பெண் டாக்டர் கைது
நாமக்கல்:
நாமக்கல் அருகே பாலியல் வன்முறைக்கு உள்ளான 15 வயது மாணவிக்கு அபார்ஷன் செய்த பெண் டாக்டரையும்அவருடைய கணவரையும் போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் அருகே ஒரு இளைஞர் தன்னிடம் டியூசன் படிப்பதற்காக வந்த இந்த மாணவியை சமீபத்தில் வற்புறுத்திகெடுத்து விட்டார்.
இதையடுத்து உள்ளூர் பெண் டாக்டர் ஒருவர் மூலம் அந்த மாணவிக்கு அபார்ஷன் செய்ய அந்த இளைஞர்ஏற்பாடு செய்தார்.
அந்த இளைஞரிடமிருந்து இதற்காகப் பணம் பெற்றுக் கொண்ட அந்தப் பெண் டாக்டரும் தன் கணவர்உதவியுடன் கெடுக்கப்பட்ட அந்த மாணவிக்கு அபார்ஷன் செய்து விட்டார்.
இந்த விஷயம் அந்த மாணவியின் தாய்க்குத் தெரிய வந்தது. அவர் கடும் கோபடைந்து இது குறித்து உடனடியாகப்போலீசாரிடம் புகார் செய்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் பெண் டாக்டரையும் அவருடைய கணவரையும் போலீசார் கைது செய்தனர்.பாதிக்கப்பட்ட மாணவி ஒரு மைனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே நடந்த சம்பவங்களால் அவமானம் தாங்க முடியாமல் அந்த மாணவியின் தாய் தற்கொலை செய்யமுயன்றுள்ளார். ஆனால் சிலர் அவரைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். கவலைக்கிடமான நிலையில்அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
-->


