ராஜ்குமாரை மீட்க சென்ற கல்யாணி, சுகுமாறனை கைது செய்ய தமிழக போலீஸ் முயற்சி
விழுப்பும் & பாண்டிச்சேரி:
கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்க தூது சென்ற பேராசிரியர் கல்யாணி மற்றும் சுகுமாறன் ஆகியோரின் வீடுகளில் இன்று காலைதமிழக போலீசார் விசாரணை நடத்தினர். இருவரையும் விசாரணைக்காக கோயம்புத்தூர் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்துக்கு வருமாறுஉத்தரவிட்டுள்ளனர்.
மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த இந்த இருவரும் பழ.நெடுமாறனுடன் காட்டுக்குள் சென்று ராஜ்குமாரை மீட்க உதவினர்.
இதில் சுகுமாறன் பாண்டிச்சேரியிலும் கல்யாணி விழுப்புரத்திலும் வசித்து வருகின்றனர்.
வீரப்பனைச் சந்தித்த நக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியம், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், கொளத்தூர் மணிஉள்ளிட்டோர் மீது தமிழக அரசு ஏற்கனவே நடவடிக்கை எடுத்துவிட்டது.
இந் நிலையில் சுகுமாறனையும் கல்யாணியையும் இப்போது தமிழக போலீசார் கைது செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகத்தெரிகிறது.
இருவரையும் ஈரோடு சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகுமாறு இரண்டுமுறை தமிழக அரசு கடிதம் அனுப்பியது. ஆனால், இதுஅரசுகள் கொடுத்த உறுதிமொழிக்கு மாறானது என்று கூறி சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஆஜராக மறுத்துவிட்டனர்.
இப்போது இவர்களை கோயம்புத்தூர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகுமாறு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
இதையடுத்து இருவரும் விழுப்புரத்தில் வெளியிட்ட கூட்டறிக்கையில்,
நாங்கள் மனிதாபிமான அடிப்படையில் தான் ராஜ்குமாரை மீட்கச் சென்றோம். தூது செல்லும்போதே நாங்கள் சிலநிபந்தனைகளை விதித்தோம். அதன்படி எதிர்காலத்தில் தொல்லை தர மாட்டோம், விசாரிக்க மாட்டோம், சாட்சி சொல்லநீதிமன்றத்துக்கு வரச் சொல்ல மாட்டோம், வழக்குத் தொடர மாட்டோம் என தமிழக, கர்நாடக அரசுகள் உறுதிமொழி அளித்தன.
இது போல 10 உறுதிமொழிகளை உள்ளடக்கிய கடிதத்தை எங்களுக்கு தனித்தனியே இரு மாநில அரசுகளும் தந்தன. இதன்பின்னர் தான் தூது செல்லவே முன் வந்தோம்.
ஆனால், கடந்த 22ம் தேதி ஈரோடு குற்றப்பிரிவு போலீசாரிடம் இருந்து எங்களுக்கு கடிதங்கள் வந்தன. அதில், நாங்கள் ஈரோடுகுற்றப்பிரிவு போலீசாரிடம் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இது அரசுகள் கொடுத்த உறுதிமொழிக்குமாறானது என்பதால் நாங்கள் ஆஜராகில்லை. இந் நிலையில் இன்று எங்கள் வீடுகளுக்கு வந்த போலீசார் கோயம்புத்தூர்சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.
முன்பு இருந்த தமிழக அரசும் கர்நாடக அரசும் கொடுத்த உறுதிமொழிகள் எங்களைக் கட்டுப்படுத்தாது என்று போலீசார் கூறினர்.ஏற்கனவே ராஜ்குமாரை மீட்டவர்களைக் கைது செய்துவிட்ட தமிழக அரசு எங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முயல்கிறது.இவ்வாறு அவர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.
-->


