For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாகிஸ்தான் மீது 84 சதவீத இந்தியர்கள் கோபம்

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்:

பாகிஸ்தான் மீது 84 சதவீத இந்தியர்கள் கோபத்தில் இருப்பதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

வாஷிங்டனைச் சேர்ந்த Pew Research Center for the People and the Press என்ற நிறுவனம் நடத்திய குளோபல் அட்டியூட்சர்வே என்ற ஆய்வில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.

அந்த கருத்துக் கணிப்பின் ஹை-லைட்ஸ்:

44 சதவீத இந்தியர்கள் குடும்பத்துக்கு உணவு வாங்க பண வசதி இல்லாமல் தவிப்பதாக கூறியுள்ளனர்.

75 சதவீத இந்தியர்களுக்கு பிரதமர் வாஜ்பாய் மீது பெரும் மரியாதை உள்ளது.

90 சதவீத மக்கள் நாட்டின் முக்கிய பிரச்சனையாகக் கருதுவது தீவிரவாதத்தைத் தான்.

90 சதவீதத்தினருக்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பலருக்கு திருப்தியில்லை.

85 சதவீத மக்கள் நாட்டை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் விடுவதில் தவறில்லை என்று நினைக்கின்றனர்.

41 சதவீத மக்கள் தங்களது உடல் நலத்தைத் தான் முக்கிய விஷயமாகக் கருதுகின்றனர். 52 சதவீத இந்தியர்கள் உடல் நலத்தை கவனிக்கபணம் இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

54 சதவீத இந்தியர்கள் அமெரிக்காவை ஆதரிக்கின்றனர்.

59 சதவீத இந்தியர்கள் குடிநீர் வசதி இல்லாமல் தவிப்பதாக கூறியுள்ளனர்.

இந்த சர்வே செப்டம்பர் 12ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடந்தன. நாட்டின் 5 முக்கிய மொழிகளில் இந்த கருத்துக் கணிப்பு நடந்தது.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X