தமிழர் பகுதிகளுக்கு சுய ஆட்சி தர இலங்கை சம்மதம்: ஓஸ்லோ பேச்சுவார்த்தையில் முக்கிய திருப்பம்
ஓஸ்லோ:
இலங்கையின் தமிழர் பகுதிகளுக்கு சுய ஆட்சி அந்தஸ்து வழங்க அந் நாடு முன் வந்துள்ளது. இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இந்த மிக முக்கிய ஒப்பந்தம் ஏற்பட்டது.
நார்வேயில் கடந்த நான்கு நாட்களாக நடந்து வந்த மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இன்று முடிவடைந்தன.
இதில், இலங்கையின் அரசியல் அமைப்புக்கு உட்பட்டே இரு தரப்பினரும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வது என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வட-கிழக்குப் பகுதிகளுக்கு சுய ஆட்சி அந்தஸ்துவழங்கப்படும்.
தாய்லாந்தில் அடுத்த மாதம் நடக்க இருந்த நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது இந்த அரசியல் விவகாரம் குறித்து பேசமுடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், ஓஸ்லோவில் இரு தரப்பினருமே மிகவும் விட்டுக் கொடுத்து செயல்பட்டதால் இந்தசுற்றிலேயே முக்கியமான ஒப்பந்தம் எட்டப்படிருக்கிறது.
மேலும் விடுதலைப் புலிகளின் போலீஸ் படையை இலங்கை போலீசுடன் இணைக்கவும் தயார் என புலிகளின் அரசியல்ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் இந்தப் பேச்சுவார்த்தைகளில் தெரிவித்தார். மேலும் இலங்கையின் அரசியல் அமைப்புசட்டத்துக்கு உட்பட்டே தமிழர் பகுதிகளுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்கினால் போதும் எனவும் தெரிவித்தார்.
இந்தியா மற்றும் கனடா நாட்டு அரசியல் அமைப்புகளைப் போல கூட்டாட்சியின் அடிப்படையில் தமிழர்களுக்கு சுய ஆட்சி தரத்தயாராக இருப்பதாக இலங்கை அமைச்சர் பெரிஸ் தெரிவித்தார்.
தமிழர் பகுதிகளுக்கு சுயாட்சி வழங்க இலங்கை நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டும். இதற்கு அரசுக்கு மூன்றில்ஒரு பங்கு மெஜாரிட்டி வேண்டும். ரணில் அரசுக்கு இந்த அளவுக்கு பெரும்பான்மை இல்லை. ஆனால், பிற கட்சிகளின்ஆதரவுடன் இந்தச் சட்டத் திருத்தத்தை ரணில் நிறைவேற்றுவார் என்று தெரிகிறது.
மேலும் இச் சட்டத்தை ஆதரிக்க அதிபர் சந்திரிகா குமாரதுங்காவை ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் ஜப்பானும்வற்புறுத்தலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications