For Daily Alerts
Just In
சென்னை-மதுரைக்கு இன்று சிறப்பு ரயில்
சென்னை:
சென்னை, மதுரை இடையே பயணிகள் நெரிசல் அதிக அளவில் இருப்பதால் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வேஇயக்கவுள்ளது.
மதுரை-சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.10 மணிக்கு மதுரையில் இருந்துகிளம்பி திங்கள்கிழமை காலை 4.30மணிக்கு சென்னை வந்து சேரும்.
அதே போல இன்று இரவு 11 மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பும் ரயில் நாளை காலை 8.20 மணிக்கு மதுரைபோய்ச் சேரும்.
ரமலான் பண்டிகை வெள்ளிக்கிழமை வந்ததால் வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் விடுமுறை வந்துவிட்டது. இதனால் பயணிகள்எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.
-->


