For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கண்கள், கைகள் கட்டப்பட்டு கிடந்த நாகப்பாவின் உடல்: போஸ்ட் மார்ட்டத்தில் துப்பாக்கி குண்டு மீட்பு

By Staff
Google Oneindia Tamil News

மைசூர்:

வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்ட நாகப்பாவின் உடல் காட்டுப் பகுதியில் அழுகிக் கிடந்ததது. அவரது கைகள் பின் பக்கமாகக்கட்டப்பட்டிருந்தன. துப்பாக்கிக் குண்டு அவரது இருதயதின் அருகே துளைத்துள்ளது.

மேலும் அவரது கண்களும் துணியால் கட்டப்பட்டிருந்தது. அடர்ந்த காட்டுப் பகுதியில் செங்கடி என்ற இடத்தில் அவரது உடல் ஒரு புதர்மறைவில் கிடந்தது. அதன் அருகே ஒரு ரேடியோவும், வாட்டர் கேன், சில பிளாஸ்டிக் விரிப்புகளும் கிடந்தன.

இதனால் இந்தப் பகுதியில் வீரப்பன் கும்பல் சில நாட்கள் தங்கியிருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. அவரது உடல் நேற்றிரவு சாம்ராஜ்நகர் கொண்டு வரப்பட்டது. பின்னர் ராமபுரா ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைக்கப்பட்டது.

போஸ்ட் மார்ட்டம்: குண்டு மீட்பு

இன்று காலை 8 மணிக்கு அவரது உடலின் பிரேதப் பரிசோதனை நடந்தது. 6 டாக்டர்களும் பெங்களூரில் இருந்து வந்த தடயவியல்நிபுணர்களும் இந்த போஸ்ட் மார்ட்டத்தைச் செய்தனர். சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த போஸ்ட் மார்ட்டத்தின்போது அவரதுஇருதயத்தின் அருகில் இருந்து ஒரு துப்பாக்கிக் குண்டு எடுக்கப்பட்டது.

தன்னிடம் இருந்து தப்ப முயன்ற நாகப்பாவை வீரப்பன் சுட்டுக் கொன்றிருக்கலாம், அல்லது தனக்கு இவரை வைத்து பணம் ஏதும்கிடைக்காது என்பதை உணர்ந்த வீரப்பன் அவரைக் கொன்றிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அல்லது உடல் நலக் குறைவால் அவர்இறந்த பின்னர் உடலில் துப்பாக்கியால் சுட்டுவிட்டு வீரப்பன் ஓடியிருக்கலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

போஸ்ட் மார்ட்டம் அறிக்கை வந்தால் தான் அவர் எப்படிச் செத்தார் என்பது தெளிவாகும்.

மருத்துவமனைக்கு வெளியே வன்முறை:

போஸ்ட் மார்ட்டம் நடந்து கொண்டிருந்தபோது வெளியே கூடிய அவரது ஆதரவாளர்கள் பெரும் வன்முறையில் ஈடுபட்டனர். அப்பகுதியில் வந்த அனைத்து வாகனங்களையும் தாக்கினர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி அவர்களைக் கலைத்தனர்.

போஸ்ட் மார்ட்டம் முடிந்த பின்னர் பலத்த பாதுகாப்புடன் அவரது உடல் 50 கி.மீ தொலைவில் உள்ள அவரது சொந்த ஊரானகாமகெரேவுக்கு கொண்டு செல்லப்பட்டது. வழியெங்கும் பல இடங்களில் அவரது உடலைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர்.

போலீஸ் ஜீப்புக்கு தீ: துப்பாக்கிச் சூடு

நாகப்பாவின் உடலைக் கொண்டு வந்த காரின் முன் வந்த போலீஸ் ஜீப்புக்கு தீ வைக்க ஒரு கும்பல் முயன்றது. இதையடுத்து கண்ணீர் புகைகுண்டுகளை போலீசார் வீசினர். ஆனால், இதனால் பலன் ஏற்படவில்லை. இதனால் வானத்தை நோக்கி போலீசார் சுட்டனர். இதையடுத்துஅக் கும்பல் சிதறி ஓடியது. ஆனால். பின்னால் வந்த ஒரு ஆம்புலன்சை அக் கும்பல் தீ வைத்து எரித்தது.

காமகெரேயில் உள்ள அவரது வீட்டிலும் ஆயிரக்கணக்கான ஐக்கிய ஜனதா தளத் தொண்டர்களும் அந்த ஊர் மக்களும் கூடியிருந்தனர்.உடலை எடுத்த வந்த போலீசார் மீது நாகப்பாவின் ஆதரவாளர்களும் கிராம மக்களும் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அங்கும் பெரும்பதற்றம் உருவானது. நிலைமை மோசமாவதைத் தடுக்க போலீஸ் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

இதையடுத்து நாகப்பாவின் உறவினர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நாகப்பாவைக் காப்பாற்ற முடியாதபோலீசின் பாதுகாப்பு எங்களுக்கு வேண்டாம், முதலில் வெளியே போங்கள் என்று போலீசாரை நாகப்பாவின் உறவினர்கள் விரட்டினர்.ஐக்கிய ஜனதா தளத் தொண்டர்களும் போலீசாருக்கு எதிராக கோஷம் போட்டனர்.

இதையடுத்து போலீசார் அங்கிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டனர். அவர்கள் நாகப்பாவின் வீட்டிலிருந்து சுமார் 500 மீட்டர் வெளியில்நிறுத்தப்பட்டனர்.

ஆயிரக்கணக்கில் இறுதி அஞ்சலி:

இதன் பின்னர் ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையின் நின்று நாகப்பாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். முதலில் மாலை 3 மணிக்குஉடலை தகனம் செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கூட்டம் அதிகமாக இருந்தால் இறுதிச் சடங்கு தாமதமடைந்தது. காலையில் உடல்வந்தது முதல் நாகப்பாவின் மனைவி பரிமளா கதறி அழுத வண்ணம் உடல் அருகே அமர்ந்திருந்தார்.

அரசு மரியாதை நிராகரிப்பு:

நாகப்பாவின் உடலுக்கு அரசு முழு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்த முன் வந்தது. ஆனால், அரசின் மரியாதை தேவையில்லை எனநாகப்பா குடும்பத்தினர் கூறிவிட்டனர்.

இந்த இறுதிச் சடங்கில் அரசின் சார்பில் கால்நடைத்துறை அமைச்சர் மகாதேவ் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர்கிருஷ்ணா காமகெரே சென்றால் அவருக்கு எதிராக நிச்சயம் போராட்டம் நடக்கும் என்பதால் அது தவிர்க்கப்பட்டுவிட்டது.

ஆனால், இந்த அமைச்சரும் நாகப்பாவின் கிராமத்துக்குள் நுழைய முடியவில்லை. பலத்த போலீஸ் காவலுடன் வந்த அவரைஆயிரக்கணக்கான கிராம மக்கள் தடுத்து கற்களையும் செருப்புகளையும் வீசினர். இதனால் அவர் திரும்பிச் சென்றார்.

வீட்டு தோட்டத்தில் உடல் அடக்கம்:

இதன் பின்னர் இன்று மாலை 5.30 மணியளவில் நாகப்பாவின் உடல் அவரது வீட்டின் பின் பகுதியிலேயே உள்ள தோட்டத்தில் அடக்கம்செய்யப்பட்டது. லிங்காயத்து சமுதாய முறைப்படி அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

போஸ்ட் மார்ட்டம் அறிக்கை:

இதுவரை போஸ்ட் மார்ட்டம் அறிக்கை விவரம் வெளியில் தெரிவிக்கப்படவில்லை. இந்த அறிக்கை வந்தால் தான் நாகப்பா எப்போதுகொல்லப்பட்டார், இதற்காக பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி ரகம் எது, குண்டு ஏது போன்ற விவரங்கள் தெரியவரும்.

இந்த குண்டு குறித்து சோதனை நடத்தப்படும். அது தமிழக போலீசாருக்கு சொந்தமானதா இல்லையா என்பது விசாரிக்கப்படும். குண்டுதமிழக போலீசாருக்கு சொந்தமானவை என்றால், தமிழக அதிரடிப்படை மீது சந்தேகம் வலுக்கும். இல்லாவிட்டால் நாகப்பாவை கொன்றதுவீரப்பன் தான் என்பது உறுதியாகும்.

அதே நேரத்தில் கடந்த காலங்களில் காட்டுப் பகுதியில் உள்ள தமிழக காவல் நிலையங்களைத் தாக்கியும், அதிரடிப்படையினருடன்சண்டையிட்டும் வீரப்பன் கும்பல் பலமுறை போலீஸ் ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளதும் நினைவுகூறத்தக்கது.

P uUS v {ut;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X