அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படிப்பு: அடுத்த ஆண்டு தொடக்கம்
சென்னை:
அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. கல்வி தொடங்கப்பட உள்ளது.
பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நிர்வாகவியலில் உயர் கல்விக்கான மையத்தை(School of excellence in Management Sciences) உருவாக்கவுள்ளது.
இந்த மையத்தின் சார்பில் எம்.பி.ஏ. கல்வி தொடங்கப்படும் என துணை வேந்தர் டாக்டர் பாலகுருசாமி கூறினார்.
சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர்,
இந்த மேனேஜ்மென்ட் கல்வி மையத்துக்கு தேவையான நிதியுதவியை தொழில் நிறுவனங்கள் வழங்கும். எம்.பி.ஏ. கல்வியில்தொழில்நுட்ப நிர்வாகவியல் (Technical management)கல்விக்கு முக்கியத்துவம் தரப்படும்.
இந்தக் கல்வி பயின்றவர்களுக்கு அடுத்த சில ஆண்டுகளில் சர்வதேச அளவில் நிறைய வேலை வாய்ப்புகள் உருவாக உள்ளன.இதனல் தொழில்நுட்ப நிர்வாகவியல் கல்வியும் தொடங்கப்படும். இந்தக் கல்வித் திட்டம் சர்வதேச தரத்தில் இருக்கும். தேசியஅளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு மாணவர்கள் இதில் சேர்க்கப்படுவார்கள்.
இந்தக் கல்வித் திட்டத்தில் தாங்களும் பங்கேற்க பல்வேறு தொழில் நிறுவனங்களும் முன் வந்துள்ளன.
சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் மாறுதல் செய்து கொள்ள கல்லூரிநிர்வாகங்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. இதனால் பொருளாதாரரீதியில் பின் தங்கிய மாணவர்களுக்கு இடங்களைஒதுக்காமல் எல்லா சீட்களையும் விலை போட்டு விற்க கல்லூரிகள் முயலும்.
இதனால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதைத் தடுக்க வேண்டியதற்கான வழி வகைகளை அரசு தான் செய்யவேண்டும் என்றார் பாலகுருசாமி.
வெள்ளி விழாவில் கலாம் பங்கேற்பு:
இதற்கிடையே சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சிகளை வரும் 16ம் தேதி ஜனாதிபதி டாக்டர்ஏ.பி.ஜே. அப்துல் கலாம் துவக்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ராமமோகன் ராவ், முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர் என்றுபாலகுருசாமி கூறினார்.
-->


