• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டைரி.. வயர்லெஸ்.. ரூ.40 கோடி பேரம்..

By Staff
|

பெங்களூர்:

காட்டுக்குள் பிணமாக மீட்கப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா எழுதியுள்ள டைரியில் "ரூ.40 கோடி"மற்றும் "வயர்லெஸ் மெஸேஜ்" என்று குறிப்பிடப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பாவின் உடல் கிடந்த இடத்திற்குச் சுமார் 500 அடி தொலைவில் ஒரு டைரி உள்ளிட்ட பல்வேறுபொருள்களை கர்நாடக அதிரடிப்படையினர் கைப்பற்றினர்.

நூறு பக்க நோட்டுப் புத்தகத்தை டைரி போல தேதியிட்டு நாகப்பாவே அதில் எழுதியுள்ளார். அது நாகப்பாவின்கையெழுத்து தான் என்பதை அவரது குடும்பத்தினரும் உறுதி செய்துள்ளனர்.

அந்த டைரியில், பல இடங்களில் "ஓம் நமசிவாயா" என்று எழுதியுள்ளார் நாகப்பா. மேலும் பொன்னாச்சிமகாதேவசாமி (கொள்ளேகால் ஐக்கிய ஜனதா தளத் தலைவர்) கடந்த அக்டோபர் 5ம் தேதி என்னை வந்துசந்தித்தார் என்றும் எழுதியுள்ளார்.

இன்னொரு பக்கத்தில் "ரூ.40 கோடி", "வயர்லெஸ் மெஸேஜ்" என்று கோட்வேர்டில் எழுதியுள்ளார்.

இந்த வார்த்தைகள் பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியுள்ளன. நாகப்பாவை விடுவிப்பதற்காக யாரிடமாவதுரூ.40 கோடி வரை வீரப்பன் பேரம் பேசியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மகாதேவசாமி தன்னை வந்து சந்தித்ததாக நாகப்பா எழுதியுள்ளதால் அவர் மீது போலீசாரின் சந்தேகக் கணைகள்பாய்ந்துள்ளன.

இது தொடர்பாக மகாதேவசாமியிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

மனைவிக்கு கடிதம்:

மேலும் தன் மனைவி பரிமளாவுக்கும் அந்த டைரியில் சில பக்கங்களில் கடிதம் எழுதியுள்ளார் நாகப்பா. அதைகடிதமாக யார் மூலமாவது அனுப்ப அவர் திட்டமிட்டிருக்கலாம் என்று தெரிகிறது. அந்தக் கடிதத்தில் அவர்காட்டில் பட்ட பாடுகளை விவரித்துள்ளார்.

அதன் விவரம்: நம் மகள் பிங்குவின் உடல்நிலை இப்போது எப்படி உள்ளது? நல்ல நர்ஸை வைத்துநல்லபடியாக அவளுக்குப் பிரசவம் பார்க்கவும். அவளை எந்தவிதமான குறையும் இல்லாமல் கணவர் வீட்டுக்குஅனுப்பி வை.

நான் கடத்தப்பட்டதால் நம் மகன் பிரீத்தம் எம்.டி. தேர்வு எழுதவே செல்லாதது எனக்குப் பெருத்த வேதனையைஅளித்துள்ளது.

பணப் பிரச்சனை ஏற்பட்டால் உறவினர்களிடம் கடன் வாங்கிக் கொள். மாடுகளை கூட விற்றுக் கொள்.இல்லையெனில் நமது நிலத்தில் விளைந்த மஞ்சளை விற்று பணமாக்கிக் கொள். கடந்த சில வாரங்களாக மழையேஇல்லை. வாழை, புளியந் தோப்பில் விளைச்சல் எப்படி உள்ளது?

இங்கே, வாரம் ஒருமுறைதான் உடை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு வாரத்திற்கும் ஒரு டிரெஸ்தான்எனக்கு வீரப்பன் கொடுக்கிறான். மாதம் ஒருமுறை மட்டுமே குளிக்க முடியும்.

தினமும் காலையில் ஒரு கிளாஸ் நீர் மட்டுமே கிடைக்கும். அதை வைத்துதான் முகம் கழுவிக் கொள்ள வேண்டும்.காலைக் கடனை கழிப்பதற்கும் ஒரே ஒரு டப்பாவில் நீர் தருவார்கள்.

குடிப்பதற்கு பவுடர் பால் மட்டும்தான். தயிர், மோரெல்லாம் கிடையாது. காட்டுக்குள்ளேயே 34 இடங்களுக்குஎன்னை மாற்றி மாற்றி அலைக்களித்துள்ளான் வீரப்பன். ஒவ்வொரு இரவிலும் இடம் மாற வேண்டும்.

P uUS v {ut;/b>

-->

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X