For Daily Alerts
Just In
அதிமுக அரசை கண்டித்த 27ம் தேதி திமுக பேரணி, ஆர்ப்பாட்டம்
சென்னை:
அதிமுக அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து வரும் 27ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் கண்டனப் பேரணிமற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுக நிர்வாகக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், இந்தப் பேரணியும், ஆர்ப்பாட்டமும்மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் வட்டத் தலைநகரங்களில் நடைபெறும்.
மாவட்டங்களில் இந்தப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்குவோரின் பெயர்களை விரைவில் தலைமைக்கழகம் அறிவிக்கும்.
வட்டத் தலைநகரங்களில் நடக்கும் போராட்டத்திற்குத் தலைமை தாங்குவோரின் பெயர்களை மாவட்டசெயலாளர்கள் அறிவிப்பார்கள் என்று அவ்வறிக்கையில் அன்பழகன் கூறியுள்ளார்.
-->


