ஆசிரியை எரித்துக் கொலை: பாண்டிச்சேரி சட்டசபை முற்றுகை
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் ஒரு ஆசிரியை எரித்துக் கொலை செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகாரில் அவரது கணவர்உள்ளிட்டவர்களைக் கைது செய்யக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்அம்மாநில சட்டசபை வளாகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பாண்டிச்சேரி அருகே உள்ளது சேயாங்குப்பம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி கோமதிஒரு ஆங்கில மீடியம் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார்.
கடந்த 12ம் தேதி தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கோமதி. ஆனால் சிகிச்சைபலனளிக்காமல் நேற்று அவர் இறந்தார்.
இறப்பதற்கு முன் அவர் கொடுத்த மரண வாக்குமூலத்தில், தன் கணவர் கணேசன், பள்ளி நிர்வாகி மற்றும் சிலர்தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் தன் மீது கெரசின் ஊற்றி தீவைத்ததாகவும், தன் சாவுக்குஅவர்களே காரணம் என்றும் கூறியிருந்தார்.
இந்தச் செய்தி பாண்டிச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஆசிரியை கோமதி சாவுக்குக் காரணமானவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கக் கோரிஇந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் இன்று பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இரு கட்சிகளையும் சேர்ந்த சுமார் 100 தொண்டர்கள் பாண்டிச்சேரி சட்டசபை வளாகத்தில் குவிந்து முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து போலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்து வந்து அவர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தையில்ஈடுபட்டனர்.
சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிமொழி அளிக்கப்பட்ட பிறகே,தங்களுடைய ஒரு மணி நேர ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டு இரு கட்சித் தொண்டர்களும் கலைந்து சென்றனர்.
-->
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications