காங்கிரஸ் அரசியல் விவகாரக் குழு முக்கிய ஆலோசனை
சென்னை:
தமிழக காங்கிரஸ் கட்சியின் அரசியல் விவகாரக் குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடந்தது.
சாத்தான்குளம் இடைத் தேர்தல் குறித்தும், அதிமுக அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவது குறித்தும் இதில் பேசப்பட்டது.
கட்சியின் தலைவர் சோ. பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்த இக் கூட்டத்தில் செயல் தலைவர் இளங்கோவன் மற்றும் 15 அரசியல்விவகாரக் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் நேற்று குமரி அனந்தன் தலைமையில் நடந்த கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் இன்றுஆலோசிக்கப்பட்டது.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறி நடந்து கொள்பவர்கள் மீது என்ன வகையான நடவடிக்கை எடுக்கலாம் என குமரி அனந்தன்தலைமையிலான ஒழுங்கு நடவடிக்கைக் குழு சில பரிந்துரைகளை செய்துள்ளதாகத் தெரிகிறது.
இதனால் காங்கிரஸ் இருந்து கொண்டே கட்சியின் முடிவுகளை விமர்சிப்பது, அதிமுகவுக்கு ஜால்ரா போடுவது போன்ற செயல்களில்ஈடுபடும் தலைவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.
-->












Click it and Unblock the Notifications