சென்னையில் ஏற்காடு எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது: பயணிகள் தப்பினர்
சென்னை:
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கிளம்பிய 2 நிமிடங்களுக்குள் ஈரோடு செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ்ரயில் தடம்புரண்டது. தடம் புரண்ட பெட்டியில் பயணித்த 33 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர்.
நேற்று இரவு வழக்கம் போல ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் சென்னையிலிருந்து கிளம்பியது.
ஆனால் கிளம்பிய இரண்டு நிமிடங்களில் ஒரு பெட்டியின் சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு விலகிக் கீழேவிழுந்தன.
இதையடுத்து அந்தப் பெட்டி மட்டும் தடம் புரண்டது. அப்போது பலத்த சத்தம் எழுந்தது. தடாலென்று தடம்புரண்டதால் தரையில் உரசி பெரும் புகையும் எழுந்தது.
இதனால் அந்தப் பெட்டியில் உள்ளவர்கள் அலறினார்கள். ரயில் மிகவும் மெதுவாகச் சென்று கொண்டிருந்ததால்உடனடியாக பிரேக் போட்டு நிறுத்தப்பட்டது.
இதையடுத்து அங்கு நடக்கவிருந்து பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தடம் புரண்ட அந்தப் பெட்டியில் மொத்தம் 33 பேர் இருந்தனர். அவர்களுக்கு எதுவும் ஆகவில்லை. அனைவரும்பத்திரமாக ரயிலை விட்டு இறங்கினர்.
பின்னர் தடம்புரண்ட பெட்டி மாற்றப்பட்டு சுமார் நான்கு மணி நேர தாமதத்துடன் அந்த ரயில் ஈரோடு கிளம்பிச்சென்றது.
-->


