சந்திரபாபு- ஜெ. சந்திப்பு: கிருஷ்ணா நீர் கோரினார்
ஹைதராபாத்:
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் சென்னை நகருக்குத் தேவையான கிருஷ்ணா நீரைத் திறந்து விடுவதற்கானநடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் தமிழக முதல்வர்ஜெயலலிதா கேட்டுக் கொண்டார்.
சுமார் ஒரு வார காலம் ஓய்வெடுப்பதற்காகத் தன் தோழி சசிகலாவுடன் நேற்று முன் தினம் ஹைதராபாத் சென்றார்ஜெயலலிதா.
இந்நிலையில் நேற்று மதியம் திடீரென்று சந்திரபாபு நாயுடுவின் வீட்டுக்கு ஜெயலலிதா சென்றார்.
அவரை அன்புடன் வரவேற்ற நாயுடுவும் அவருடைய மனைவி புவனேஸ்வரியும், ஜெயலலிதாவுக்குச் சிறப்பானமதிய விருந்தளித்தனர். பின்னர் நாயுடுவுடன் சுமார் இரண்டு மணி நேரம் பேச்சு நடத்தினார் ஜெயலலிதா.
வரும் ஏப்ரல் மாதம் முதல் சென்னைக்குப் போதுமான கிருஷ்ணா நதி நீரை வழங்குவதற்கான நடவடிக்கைகளைத்துரிதப்படுத்த வேண்டும் என்று நாயுடுவிடம் அப்போது ஜெயலலிதா கேட்டுக் கொண்டார்.
எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் பணிகளை முடிக்கும் அளவில் நடவடிக்கைகள்எடுக்கப்படும் என்று ஜெயலலிதாவுக்கு நாயுடு உறுதியளித்தார்.
கடந்த வாரம் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்காக டெல்லி சென்றிருந்தபோதே இரு முதல்வர்களும் இந்தச்சந்திப்பு குறித்து முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது.
பா.ஜ.க. கூட்டணியில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அதிமுக இணையலாம் என்று எதிர்பார்க்கப்படும்சூழ்நிலையில் நாயுடுவும் ஜெயலலிதாவும் சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகிக்கிறது என்பதும்நினைவிருக்கலாம்.
-->
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications