For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரிலையன்சின் மொபைல் போன் புரட்சி: 40 பைசாவுக்கு எஸ்.டி.டி. பேசலாம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை & டெல்லி:

இந்தியாவில் தகவல் தொடர்பில் புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மிகக் குறைந்தகட்டண மொபைல் போன் சேவையை பிரதமர் வாஜ்பாய் துவக்கி வைத்தார்.

முதல் கட்டமாக இந்தியாவின் அனைத்து நகரங்களையும், 640 சிறு நகரங்களையும் மொபைல் போன் கட்டமைப்பில் கொண்டுவந்துள்ளது ரிலையன்ஸ். இதற்காக நாடு முழுவதும் டெராபிட் திறன் கொண்ட ஆப்டிக் கேபிள் கட்டமைப்பைஉருவாக்கியுள்ளது. விரைவில் தனது வயர்லெஸ் லோக்கல் லூப் மூலம் இந்தியாவின் 6.4 லட்சம் கிராமங்களையும், 2,நகரங்களையும் இணைக்கப் போகிறதாம் இந்த நிறுவனம்.

கட்டணத்தை மற்ற மொபைல் போன் நிறுவனங்களை விட மிகக் குறைவாக நிர்ணயித்துள்ளது ரிலையன்ஸ். தங்களதுமொபைலில் ஒரு எஸ்.டி.டி. காலின் விலை ஒரு தபால் கார்டை விடக் குறைவாக நிர்ணயித்திருக்கிறது ரிலையன்ஸ்.

இந்த மொபைல் சேவையை 3 விதமான திட்டங்களில் அமலாக்குகிறது ரிலையன்ஸ். முதல் திட்டம் அம்பானி பயனீர் ஆபர்திட்டம். இதற்கு மார்ச் மாதத்துக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். இத் திட்டத்தின் கீழ் மொபைல சேவையைப் பயன்படுத்தவிரும்புவோர் முதலில் ரூ, 10,500 கட்டணம் செலுத்த வேண்டும்.

இதற்கு ஈடாக ரிலையன்ஸ் நிறுவனமே தனது டிஜிட்டல் மொபைல் போனை வழங்கும். இதன்

அதன் பிறகு 3 ஆண்டுகளுக்கு நாடு முழுவதும் எஸ்.டி.டி., லோக்கல் கால்கள் பேச நிமிடத்துக்கு 40 பைசா கட்டணமாகவசூலிக்கப்படும். எத்தனை இன்-கம்மிங் கால்கல் வந்தாலும் இலவசம்.

இதில் பேசுவது தவிர, ஈ-மெயில், மல்ட்டி மீடியா டேட்டாக்கள் டிரான்ஸ்பர், மியூசிக் வீடியோ பிளே, ஸ்ட்ரீமிங் கிளிப்ஸ்டவுன்லோட் என தனது மொபைல் சேவையில் அனைத்து நவீன தொழில்நுட்பங்களையும் நம் விரல் நுனிக்கு கொண்டு வரஉள்ளது.

இத் திட்டம் தவிர ஸ்டான்ட்டர்ட், ரெகுலர் என்ற மற்ற இரு திட்டங்களையும் ரிலையன்ஸ் அறிமுகப்படுத்த உள்ளது. இத்திட்டங்களில் சேர மார்ச் மாதத்துக்குப் பின் ரிஜிஸ்ட்ரேசன தொடங்கும்.

இத் திட்டங்களில் சேர ரூ. 3,000 கட்டினால் ஒரு மொபைல் போனை இலவசமாகத் தருவார்களாம். அதன் பின்னம் மாதம் மாதம்ரூ 600 உறுப்பினர் கட்டணம் செலுத்த வேண்டும். இதிலும் அவுட் கோயிங் கால்கள் நிமிடத்துக்கு 40 பைசா தான். இன் கம்மிங்இலசம்.

எல்.ஜி மற்றும் தேவூ நிறுவனங்களுடன் இணைந்து இதற்காக சிறப்பான டிஜிட்டல் மொபைல் போன்களை ரிலையன்ஸ்தயாரித்துள்ளது.

ஒரு நிமிடத்துக்கு அவுட் கோயிங் பேச ரூ. 8 வரை நம்மிடம் வசூலித்து வரும் மொபைல் போன் நிறுவனங்களும் உண்டு.கட்டணத்தை மிகக் குறைவாக வைத்துள்ளதன் மூலம் இந்தியாவில் மிகப் பெரிய தகவல் பரிமாற்றப் புரட்சியை ரிலையன்ஸ்ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

உண்மையிலேயே சொன்னதை எல்லாம் ரிலையன்ஸ் தருமா என்பதைப் பார்க்க மார்ச் வரை நாம் பொறுத்திருக்க வேண்டும்.அப்போது தான் இதன் மொபைல் சேவை நாடு முழுவதும் தொடங்க உள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்துடன் போட்டி போட பிற மொபைல் நிறுவனங்களும் கட்டணத்தைக் குறைக்க வாய்ப்புள்ளது. இதனால்மொபைல் போன்களை சராசரி இந்தியர்களும் பயன்படுத்தும் நல்ல சூழ்நிலை வரலாம். பார்ப்போம்.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X