லிம்கா சாதனையாளர் கிரி
பெங்களூர்:
வினாடி-வினா போட்டிகளை நடத்தி வரும் கிரி பாலசுப்பிரமணியம் சமீபத்தில் "லிம்கா" சாதனைப் புத்தகத்தில்இடம் பெற்றுள்ளார். இண்டியா இன்போ.காம் நிறுவனத்தின் இன்னொரு பிரிவான குயிஸ்பிரைன்.காம் இணையத்தளத்தின் ஆசிரியர் இவர்.
1997ம் ஆண்டில் சென்னையில் நடத்தப்பட்ட குயிஸ் போட்டியில் ஒரே நாளில் 522 கேள்விகளைக் கேட்டு இவர்புரிந்த சாதனைக்காகத் தான் லிம்கா பட்டியலில் இடம் கிடைத்தது. இதுவரை எந்த வினாடி-வினா தொகுப்பாளரும்ஒரே நாளில் இவ்வளவு கேள்விகளைக் கேட்டதில்லை.
இது தவிர கிரி படைத்துள்ள சாதனைப் பட்டியல் மிகப் பெரியது. அதில் குறிப்பாக சில மட்டும் இதோ:
இந்தியாவில் பள்ளிகளுக்கு இடையே கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் குறித்த வினாடி-வினா போட்டிகளைமுதன்முதலில் நடத்தியவர் கிரிதான். டாடா கன்சல்டன்ஸி சாப்ட்வேர் நிறுவனம் சார்பில் நாடு முழுவதும்நடத்தப்பட்ட இந்தப் போட்டிகளில் 14,000 மாணவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பயோ-டெக்னாலஜி தொடர்பாக நடத்தப்பட்ட வினாடி-வினா போட்டி கிரியின் 3வது சாதனையாகும். கடந்தஆண்டு கர்நாடக உயிர் தொழில்நுட்பத் துறை சார்பில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் 2,000 பேர் கலந்துகொண்டனர். 244 பேர் பரிசுகளை அள்ளிச் சென்றனர்.
அதே போல கடந்த ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற "எக்ஸோடஸ்-2000" என்ற விழாவின்போது சுற்றுலாதொடர்பாக வினாடி-வினா போட்டிகளை நடத்தினார் கிரி. தேசிய அளவில் சுற்றுலா குறித்து இதுவரை குவிஸ்போட்டி நடந்தே இல்லை என்ற நிலையில் அதை நடத்தி சாதனை படைத்தார். இதற்காக இந்திய சுற்றுலாத் துறைஇவருக்கு பாராட்டு வழங்கியது.
கிராமப் பகுதிகளிலும் கம்ப்யூட்டர் தொழில்நுட்ப வினாடி-வினாப் போட்டிகளை நடத்தியது கிரியின் 5வதுசாதனை. மூன்று வாரங்களில் சுமார் 34,000 கிராமப்புற பள்ளி மாணவர்களிடம் இந்தப் போட்டி நடத்தப்பட்டது.
பள்ளி மாணவர்களின் திறன்களை அறிந்து கொள்வதற்காகவும் "குயிஸ் கோஸன்ட்" என்ற போட்டியை கர்நாடகம்முழுவதும் நடத்தினார் கிரி. இது அவருடைய இன்னொரு சாதனை.
கடைசியாக, பள்ளி மாணவர்களுக்கு இடையே உடல்நலம் தொடர்பாக கிரி நடத்திய வினாடி-வினா போட்டிதான்அவருடைய 7வது சாதனை ஆகும். டெல்லியில் நடந்த இந்தப் போட்டியில் 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள்பங்கேற்றனர். மாணவர்கள் மத்தியில் உடல் நலம் குறித்து இவ்வளவு பெரிய போட்டி நடந்தது அதுவே முதல்முறையாகும்.
நமது நிருபரிடம் பேசிய கிரி, "வினாடி-வினா போட்டிகளை நடத்தும் சாதனையாளர்களுக்கு என தனிப் பிரிவைஒதுக்கிய "லிம்கா" நிறுவனத்துக்குத்தான் முதலில் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். இந்தியாவில்எவ்வளவோ வினாடி-வினா தொகுப்பாளர்கள் வளர்ந்து வரும்போது "லிம்கா" புத்தகத்தில் இடம் கிடைத்திருப்பதுஎன் அதிர்ஷ்டம் என்றுதான் கூற வேண்டும்" என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications