For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுரை அருகே ஜல்லிக்கட்டு: 50 "காளைகள்" காயம்

By Staff
Google Oneindia Tamil News

பொமதுரை:

"ஏறு தழுவுதல்" எனும் பெயரில் பண்டைய இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு காளைகளைஅடக்கும் வீர விளையாட்டு, பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடக்கத்தொடங்கியுள்ளது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் மற்றொரு சிறப்பம்சம் ஜல்லிக்கட்டு எனும் காளைகளை அடக்குதல்."ஏறு தழுவுதல்" என்றும் இது இலக்கியங்களில் அழைக்கப்படுகிறது.

திமிறி வரும் காளைகளை அடக்குதலே ஆண்களுக்கு அழகு என்று அந்தக் காலத்தில் நிர்ணியிக்கப்பட்டுதொடர்ந்து இந்தக் காலத்திலும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் தொன்று தொட்டு நடந்து வருகிறது.

பொங்கல் திருநாளின்போது இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். ஜல்லிக்கட்டுக்குப் பெயர் போனதுஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு. அதே அளவிற்கு மதுரை அருகே உள்ள அவனியாபுரத்தில் நடைபெறும்ஜல்லிக்கட்டும் பிரபலமானது.

அவனியாபுரத்தில் பொங்கல் பண்டிகையான நேற்று ஜல்லிக்கட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருச்சி,திண்டுக்கல், மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 500 காளைகள் இதில் கலந்து கொண்டன.

வாடி வாசலிலிருந்து காளைகள் திறந்து விடப்பட்டதும், அங்கு கூடியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட "காளைகள்"(இளைஞர்கள்) ஆரவாரத்துடன் அவற்றை எதிர்கொண்டு அடக்க முயன்றனர்.

காளைகளும், "காளைகளும்" மோதியதைப் பார்க்க உள்ளூர் கூட்டம் மட்டுமல்லாது, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் ஏராளமான அளவில் திரண்டிருந்தனர்.

இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் சுமார் 50 பேர் படு காயமடைந்தனர். அவர்கள் ராஜாஜி பொது மருத்துவமனையில்சேர்க்கப்பட்டனர்.

காளைகளை அடக்கி வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன. அவனியாபுரம்போலீஸார் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். அவசர மருத்துவ வசதிகளுக்கும் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

இன்று மாட்டு பொங்கல்...

இதற்கிடையே தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்றவழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

ஆனாலும் பெரும்பாலான விவசாயிகள் சம்பா சாகுபடி செய்ய முடியாததால் கடன் வாங்கி, சோகத்துடன்தான்பொங்கலைக் கொண்டாடினர்.

இந்நிலையில் இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதற்கும் விவசாயிகள் மத்தியில் அதிக உற்சாகம்காணப்படவில்லை.

வருடம் பூராவும் விவசாயத்திற்காக கடுமையாக உழைக்கும் மாடுகள், இன்றுதான் விசேஷமாக கவனிக்கப்படும்.ஆனால் தங்களுக்கே ஒன்றும் இல்லாத நிலையில் மாடுகளை எப்படிக் கவனிப்பது என்ற கவலையில்ஆழ்ந்துள்ளனர் விவசாயிகள்.

இருந்தாலும் தமிழகத்தின் பிறபகுதிகளைச் சேர்ந்த மக்கள் மாடுகளைக் குளிப்பாட்டி, அவற்றின் கொம்புகளுக்குவண்ணம் தீட்டி, பொங்கல் உள்ளிட்ட உணவு வகைகளைப் படையலிட்டு மாட்டுப் பொங்கலைக் கொண்டாடிமகிழ்ந்தனர். பல இடங்களில் கோமாதா பூஜைகளும் நடைபெற்றன.

மாட்டுப் பொங்கலையொட்டி திருவண்ணாமலை கோவிலில் உள்ள நந்தீஸ்வரர் சிலைக்கு சிறப்பு அலங்காரம்செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகங்களும் பூஜைகளும் நடைபெற்றன.

நாளை காணும் பொங்கல்...

பொங்கல் பண்டிகையின் இறுதி நாளான நாளை "காணும் பொங்கல்" கொண்டாடப்படுகிறது. இந்த நாளின்போதுஉற்றார், உறவினர், நண்பர்களைப் பார்த்து நலம் விசாரித்து, இனிப்புகளைப் பரிமாறிக் கொள்வார்கள்.

சென்னை நகரில் காணும் பொங்கல் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். மெரீனா கடற்கரை, சாந்தோம்கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, வி.ஜி.பி. கடற்கரை, மாமல்லபுரம், கோவில்கள் என கூட்டம் அதிகம் கூடும்இடங்களில் லட்சக்கணக்கான மக்கள் கூடி காணும் பொங்கலைக் கொண்டாடுவர்.

காணும் பொங்கலையொட்டி நாளை மெரீனா கடற்கரையில் பொதுமக்கள் கடலில் குளிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் இவ்விழாவிற்காக வந்து கடலில் குளிக்கும்போது சிலர்உயிரிழந்துள்ளனர்.

அதைத் தவிர்ப்பதற்காகவே சென்னை மாநரப் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். மேலும்மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்புப் பணிகளையும் போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

󠣰 PQug ٶPlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X