காவிரிக் கூட்டத்தை புறக்கணித்த ரங்கசாமிக்கு எதிராக "மண் பொங்கல்"
பாண்டிச்சேரி:
காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல், அக் கூட்டமே ரத்தாகக் காரணமாக இருந்தபாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக மண் பொங்கல் வைக்கும் நூதனப் போராட்டம் நடந்தது.
பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையக் கூட்டம் கடந்த 13ம் தேதி நடப்பதாக இருந்தது.இதில் கலந்து கொள்வதற்காக சென்னை விமான நிலையம் வரை வந்த ரங்கசாமி, டெல்லி பயணத்தை திடீரென்றுரத்து செய்துவிட்டு பாண்டிச்சேரிக்கே திரும்பி விட்டார்.
எனக்கு உடல் நிலை சரியில்லை என்று பிரதமர் அலுவலகத்குக்கு பேக்ஸ் கடிதம் அனுப்பினார்.
கேரள முதல்வர் ஏ.கே. ஆண்டனியும் கலந்து கொள்ளாததைத் தொடர்ந்து காவிரி ஆணையக் கூட்டமே ரத்துசெய்யப்பட்டது.
இதையடுத்து காவிரியில் தண்ணீர் வாங்கித் தராமல் மக்களுக்கு ரங்கசாமி துரோகம் இழைத்து விட்டதாகக் கூறிஅம்மாநில திமுக, பாமக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் காரைக்கால் பகுதியில்நூதனமான போராட்டம் நடத்தினர்.
நடுச் சாலையில் பொங்கல் சட்டிகளை வைத்து, அடுப்புகளை வைத்து, சட்டிகளில் மண்ணை நிரப்பி பொங்கல்வைத்தனர். பின்னர் பானைகளை நடு ரோட்டிலேயே போட்டு உடைத்து தங்களது எதிர்ப்பை தெவித்தனர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பேச்சைக் கேட்டுக் காண்டு காரைக்கால் பகுதி விவசாயிகளுக்குரங்கசாமி துரோகம் இழைத்து விட்டதாக அப்போது அவர்கள் கோஷம் எழுப்பினர்.
-->


