ஜெயலலிதா- பா.ம.க. அமைச்சர் திடீர் சந்திப்பு
சென்னை:
மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி சென்னை தலைமைச் செயலகம் சென்று அங்கு முதல்வர்ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினார்.
தெற்கு ரயில்வேயின் பொது மேலாளரான வி. ஆனந்த்துடன் தலைமைச் செயலகத்துக்குச் சென்ற மூர்த்தி அங்குஜெயலலிதாவைச் சந்தித்தார்.
தமிழகத்தில் நிறைவேற்றப்படவுள்ள பல்வேறு ரயில்வே திட்டங்கள் குறித்து அவர்கள் மூவரும் பேச்சு நடத்தினர்.
இந்தப் புதிய திட்டங்கள் பற்றிய விவரங்களையும் ஜெயலலிதாவிடம் மூர்த்தியும் ஆனந்த்தும் விளக்கிக் கூறினர்.
"உங்கள் ஆட்சியில்தான் தமிழகத்தின் புதிய ரயில்வே திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்" என்று மூர்த்திகூறினார்.
அதற்கு சிரித்துக் கொண்டே பதிலளித்த முதல்வர் "நீங்கள்தான் மத்திய அமைச்சர். நீங்கள்தானே திட்டங்களைநிறைவேற்ற வேண்டும்" என்றார்.
உடனே மூர்த்தி, "தமிழகத்தில் உங்கள் ஆட்சி இருக்கும்போதே இந்தத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்என்பதே என் ஆசை" என்று கூறினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.கவுடன் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக எந்த நேரத்திலும்கூட்டணி அமைக்கலாம் என்ற நிலையில், அதே தே.ஜ. கூட்டணியில் உள்ள பா.ம.கவைச் சேர்ந்த அமைச்சர் மூர்த்திஜெயலலிதாவைச் சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-->


